ஆனந்த் அம்பானி உருவாக்கிய உலகின் பிரம்மாண்ட வனவிலங்கு மறுவாழ்வு மையம்… வந்தாரா பற்றி பலர் அறியாத தகவல்கள்…

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி அவர்களின் இளைய மகனான ஆனந்த் அம்பானி தனது கனவு திட்டமான வந்தாரா விலகுகள் மறுவாழ்வு மையத்தை தொடங்கி இருக்கிறார். குஜராத்தில் ஜாம்நகரில் 3500 ஏக்கர் பரப்பளவில் இந்த…

vantara

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி அவர்களின் இளைய மகனான ஆனந்த் அம்பானி தனது கனவு திட்டமான வந்தாரா விலகுகள் மறுவாழ்வு மையத்தை தொடங்கி இருக்கிறார். குஜராத்தில் ஜாம்நகரில் 3500 ஏக்கர் பரப்பளவில் இந்த வந்தாரா அமைந்துள்ளது. இந்த விலங்குகள் மறுவாழ்வு மையத்தில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பாதுகாப்பற்ற சூழலில் இருந்து மீட்கப்பட்ட 2000 வகையான உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. உலகிலேயே விலங்குகளுக்கு என பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட மறுவாழ்வு மையம் இதுதான் என்று ஆனந்த் அம்பானியின் வந்தாரா பாராட்டுகளை பெற்று வருகிறது. சமீபத்தில் கூட இந்த வந்தாராவை பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட்டார். இந்த வந்தாரா பற்றிய பல யாரும் அறியாத சுவாரஸ்ய தகவல்களை பற்றி இனி காண்போம்.

இந்த ஆனந்த் அம்பானியின் வந்தாராவில் உடல்நலம் குன்றிய வனவிலங்குகளுக்காக எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் மற்றும் ஐசியூ வசதிகளுடன் கூடிய அதிநவீன வனவிலங்கு மருத்துவமனை இருக்கிறது. இங்கு மயக்க மருந்து, இருதயவியல், சிறுநீரகவியல், எண்டோஸ்கோபி, பல் மருத்துவம் போன்ற பல சிறப்பு துறைகள் கால்நடை பராமரிப்புக்காக தொடங்கப்பட்டிருக்கிறது.

மேலும் ஆனந்த் அம்பானியின் வந்தாரா ஆனது உலகின் மிகப்பெரிய சிறுத்தை மீட்பு மையம் யானை பராமரிப்பு மையம் ஆக செயல்படுகிறது. இந்த வந்தாராவில் 250க்கும் மேற்பட்ட யானைகள் இருக்கிறது. உலக அளவில் 40க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இணைந்து இந்த வந்தாரா செயல்படுகிறது.

உலக அளவில் அதிக எண்ணிக்கையில் முதலைகளை இடமாற்றம் செய்ததற்கான சாதனையை வந்தாரா ஏற்படுத்தியிருக்கிறது. வனவிலங்குகளுக்கான ஆம்புலன்ஸ்கள் 75க்கும் மேற்பட்டவைகளை வந்தாரா செயல்படுத்திக் கொண்டு இருக்கிறது. ஆனந்த் அம்பானியின் கனவு திட்டமான இந்த வந்தாராவுக்கு உலகின் பல பகுதிகளில் இருந்தும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். விலங்குகளும் மனிதர்களைப் போலே பராமரிக்கப்பட வேண்டும் என்று அவரது எண்ணம் மிகவும் உயர்வானது தான்.