உலகின் விலை குறைந்த ஓய்வூதிய திட்டம்… நேஷனல் பென்ஷன் சிஸ்டம் ( NPS) இன் சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா…?

By Meena

Published:

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலவிதமான தமிழில் முதலீடு செய்ய ஆரம்பித்து விட்டார்கள். லைஃப் இன்சூரன்ஸ் ஷேர் மார்க்கெட் அரசு திட்டங்கள் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் என பலதரப்பட்ட திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். இது தவிர ஹெல்த் இன்சூரன்ஸ் லைப் இன்சூரன்ஸ் பென்ஷன் இன்சூரன்ஸ் போன்றவற்றையும் எடுத்துக் கொள்கிறார்கள். அதில் ஒன்றுதான் நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (NPS) எனப்படும் தேசிய ஓய்வூதிய அமைப்பு. இதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

இந்தியாவில் குடிமகனாக அல்லது குடிமகளாக இருக்கும் அனைவரும் இந்த நேஷனல் பென்சன் சிஸ்டமில் சேரலாம். உலகின் மிகக் குறைந்த ஓய்வூதிய திட்டமாக இந்த நேஷனல் பென்ஷன் சிஸ்டம் இருக்கிறது. இதில் நிர்வாகக் கட்டணங்கள் மற்றும் நிதி மேலாண்மை கட்டணங்களும் மிகவும் குறைவு. எதிர்காலத்திற்கு ஓய்வூதியம் பெறுவதற்கான வழிவகையை இது ஏற்படுத்துகிறது.

இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தலைமை அஞ்சல் அலுவலகத்தில் செயல்படும் POP களில் ஏதாவது ஒரு கணக்கை திறந்து நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண்ணை பெற வேண்டும். அதற்குப் பிறகு விண்ணப்பதாரர் சொந்த முதலீட்டு விருப்பத்தையும் ஓய்வூதிய நிதி எவ்வளவாக இருக்க வேண்டும் என்பதை தேர்வு செய்யலாம். இந்திய நாட்டில் எங்கு இருந்தும் ஒருவர் கணக்கை இயக்கலாம்.

மேலும் கணக்கை திறந்த பிறகு பதிவு செய்யப்பட்ட பிஓபி எஸ் பி கிளையை மட்டுமில்லாமல் வேறு வேலை மாற்றம் அடைந்து வேறு எங்கு நகரங்களுக்கு சென்றாலும் கூட அங்கிருந்து இ என் பி எஸ் மூலம் தங்களது முதலீட்டை செய்யலாம். விண்ணப்பதாரர் 18 முதல் 70 வயதிற்குள் இருக்க வேண்டும் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட கேஒய்சி விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும்.

என் பி எஸ் இல் முதலீடு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு வரி விக்கு அளிக்கப்படுகிறது. சுயதொழில் செய்பவர்களுக்கும் வரி சலுகை அளிக்கப்படுகிறது. பத்து சதவீதம் வரை வரி விலக்கு உங்களுக்கு கிடைக்கும். ஒரு ஆண்டிற்கான குறைந்தபட்ச முதலீடு ரூபாய் ஆயிரம் ஆகும். 35 முதல் 40 வருடங்களுக்கு இந்த தேசிய ஓய்வூதிய அமைப்பின் கால அளவு இருக்கும். இந்த திட்டம் நிறைவடையும் போது உங்களிடம் கணிசமான தொகை இருக்கும். அதனால் யாரையும் எதிர்பாராமல் உங்கள் ஓய்வு காலத்தை நிம்மதியாக கழிக்கலாம்.