காதல், திருமணம் மற்றும் உறவுமுறை ஆலோசகரான கிஷன் சிங், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஒரு உண்மை சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. தனது முன்னாள் வாடிக்கையாளர் ஒருவரின் கதையை, அடையாளங்கள் மற்றும் இடங்களின் பெயர்களை மாற்றி, தனியுரிமையை பாதுகாக்கும் நோக்கில் அவர் பகிர்ந்துள்ளார்.
கதை என்ன? மகிழ்ச்சியான தொடக்கம்:
ஆன்லைன் திருமண இணையதளம் மூலம் அறிமுகமான ஒரு தம்பதி, ஒரு மாதத்தில் திருமணம் செய்துகொண்டனர். அவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவே தொடங்கியுள்ளது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, சுஷ்மா கர்ப்பமடைந்துள்ளார்.
நிபந்தனைகள்:
திருமணத்தின்போது, சுஷ்மாவின் தந்தை, தனது மருமகனுக்கு அரசு வேலை, ரூ.1 லட்சத்திற்கும் மேலான சம்பளம், மற்றும் நேர்மையான கடந்த காலம் ஆகிய நிபந்தனைகளை விதித்ததாகவும், அனைத்தையும் தான் பூர்த்தி செய்ததாகவும் கணவன் தனது ஆலோசகரிடம் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியான அழைப்பு:
திருமணமான 4-5 மாதங்களுக்கு பிறகு, அங்கித் என்ற நபர் கணவனை தொடர்புகொண்டு, தான் சுஷ்மாவின் முன்னாள் காதலன் என்றும், அவர்கள் 3 வருடங்கள் உறவில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அங்கித் குறைந்த சம்பளம் வாங்கியதால், சுஷ்மாவின் குடும்பத்தினர் திருமணத்திற்கு மறுத்துள்ளனர்.
உண்மையை உடைத்த அங்கித்:
உங்கள் திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு, சுஷ்மாவும் நானும் உடலுறவு கொண்டோம். அவள் வேண்டுமென்றேதான் அதைச் செய்தாள். ‘நான் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டாலும், என் வயிற்றில் உன் குழந்தைதான் வளர வேண்டும்’ என்று சொன்னாள்” என்று அங்கித் கூறியது, கணவனை மனதளவில் மிகவும் நொறுக்கியுள்ளது.
மனைவி கூறிய உண்மை
கணவன், சுஷ்மாவிடம் இதுகுறித்து கேட்டபோது, அவள் அங்கித் சொன்ன அத்தனை விஷயங்களையும் உறுதிப்படுத்தினார். “அவர் என் கடந்த காலத்தின் ஒரு பகுதி. திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு, கடைசியாக ஒருமுறை சந்திக்கலாம் என்று அங்கித் கேட்டதால்தான் அவரை சந்தித்தேன். ஆம், நான் கர்ப்பமாக இருப்பது அவர் குழந்தைக்குதான் என்று சுஷ்மா கூறியுள்ளார்.
இந்த சம்பவம், கணவனை மனதளவில் மிகவும் பாதித்து, “யாருடன் பேசுவது, இனி என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை” என்று அவர் மனமுடைந்து கூறியதாக கிஷன் சிங் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த கதை வாடிக்கையாளரின் அனுமதியோடு பகிரப்பட்டுள்ளது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சமூக வலைத்தளங்களின் எதிர்வினை.. சமூகத்தின் பார்வை:
சமூகம் எப்போதும் ‘மாப்பிள்ளை எவ்வளவு சம்பாதிக்கிறார்’ என்பதில்தான் கவனம் செலுத்துகிறது” என்று ஒரு பயனர் கருத்துத் தெரிவித்தார். மற்றொரு பயனர், “உங்களிடம் ஆதாரம் இருந்தால், அவளை விட்டு வெளியேறுங்கள். அந்த ஆதாரங்களை வாழ்நாள் முழுவதும் வைத்திருங்கள். அது எதிர்காலத்தில் உங்களுக்கு உதவும்” என்று கூறியுள்ளார். இன்னொரு பயனர் இந்த ஏமாற்று குடும்பத்தின் மீது வழக்குத் தொடருங்கள். இந்த மனிதனுக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்று ஒருவர் வலியுறுத்தினார்.
இந்திய சட்டத்தின்படி ஒரு தம்பதிக்கு திருமணம் முடிந்து 280 நாட்களுக்குள் பிறந்த குழந்தை, கணவனுக்கே உரியது என்று சட்டம் கருதுகிறது என்று ஒருவர் சுட்டிக்காட்டினார். கணவன் தந்தையாக இல்லை என்று டி.என்.ஏ. ஆதாரம் இருந்தாலும், சட்டப்படி கணவனே தந்தையாக கருதப்படுவார் என்றும் அவர் கூறினார்.
https://www.instagram.com/reel/DM8EimASnLR/
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
