சீனாவுக்கு ஒரு கமாண்ட், பாகிஸ்தானுக்கு ஒரு கமாண்ட், கடல் எல்லையை பாதுகாக்க ஒரு கமாண்ட்.. ராணுவத்திற்கு புதிய பதவியை உருவாக்கிய பிரதமர் மோடி.. இந்தியாவை இனி எவனும் நெருங்க முடியாது..! பிளான் போடுறது ஒரு கேப்டனா இருக்கலாம்… ஆனா பெர்ஃபார்ம் பண்ணப்போறது ஒரு டீம்! இந்த தியேட்டர் கமாண்ட்ல ‘டக் அவுட்’ ஆகப்போறது இந்தியாவுக்கு எதிரா சதி செய்றவங்க மட்டும்தான்!

இந்திய பாதுகாப்பு துறையில் நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வரும் மிக முக்கியமான சீர்திருத்தம் ‘ஒருங்கிணைந்த தியேட்டர் கமாண்ட்’ முறையாகும். தற்போது இந்திய இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று பிரிவுகளும் தங்களுக்குள் தனித்தனி கட்டளை…

indian army

இந்திய பாதுகாப்பு துறையில் நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வரும் மிக முக்கியமான சீர்திருத்தம் ‘ஒருங்கிணைந்த தியேட்டர் கமாண்ட்’ முறையாகும். தற்போது இந்திய இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று பிரிவுகளும் தங்களுக்குள் தனித்தனி கட்டளை அமைப்புகளை கொண்டுள்ளன. மொத்தம் 17 கமாண்டுகள் இருக்கும் நிலையில், போர்க்காலங்களில் இவற்றுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது சவாலான காரியமாக உள்ளது. இதனை சரிசெய்து, மூன்று படைகளையும் ஒரே தலைமைக்கு கீழ் கொண்டு வந்து, வளங்களை சரியாகப் பகிர்ந்தளிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்த மாற்றத்தின் தொடக்கமாக, 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ‘தலைமை பாதுகாப்பு அதிகாரி’ என்ற புதிய பதவியை உருவாக்கினார். இந்த பதவி உருவாக்கப்பட்ட பிறகு, படைகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. தற்போது செயல்பாட்டில் உள்ள 17 கமாண்டுகளை ஒன்றிணைத்து, மூன்று அல்லது நான்கு முதன்மையான ‘தியேட்டர் கமாண்டுகளை’ உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, சீனாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு ஒரு கமாண்ட் , பாகிஸ்தான் எல்லையை கவனிக்கும் வகையில் மேற்கு பகுதியில் ஒரு கமாண்ட் மற்றும் கடல்சார் எல்லைகளை பாதுகாக்க தெற்கில் ஒரு கமாண்ட் என பிரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒரு சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், சீனாவை கவனிக்கும் கமாண்டிற்கு இராணுவ அதிகாரியும், பாகிஸ்தான் எல்லையைக் கவனிக்கும் கமாண்டிற்கு விமானப்படை அதிகாரியும், கடல்சார் கமாண்டிற்கு கடற்படை அதிகாரியும் தலைமை தாங்கக்கூடும் என பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.

இந்த அமைப்பில் ஒரு படையில் இருந்து தளபதி நியமிக்கப்பட்டால், அவருக்கு அடுத்த நிலையிலுள்ள அதிகாரி மற்றொரு படையில் இருந்து நியமிக்கப்படுவார். உதாரணமாக, ஒரு கமாண்டின் தலைவர் இராணுவத்தை சேர்ந்தவர் என்றால், அவரது துணை அதிகாரி விமானப்படை அல்லது கடற்படையை சேர்ந்தவராக இருப்பார். இது படைகளுக்கிடையே உள்ள பிணைப்பை வலுப்படுத்தும்.

ஏற்கனவே அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இத்தகைய ‘முப்படை ஒருங்கிணைந்த கமாண்ட்’ வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. இதுவே எதிர்கால தியேட்டர் கமாண்டுகளுக்கு ஒரு முன்னோடியாக கருதப்படுகிறது. அங்கு இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் கடலோர காவல்படை ஆகிய அனைத்தும் ஒரே தலைமையின் கீழ் மிக சிறப்பாகப் பணியாற்றி வருகின்றன.

விமானப்படையைப் பொறுத்தவரை, போர்க்கப்பல்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றை பிரிப்பதில் சில நடைமுறைச் சிக்கல்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. போதிய எண்ணிக்கையிலான போர் விமானங்கள் இல்லாத சூழலில், விமானப்படை வளங்களை ஒவ்வொரு தியேட்டருக்கும் பிரித்து கொடுப்பது அதன் செயல்திறனை பாதிக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இருப்பினும், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

தியேட்டர் கமாண்ட் முறை அமலுக்கு வரும்போது, இந்தியா எதிர்கொள்ளும் எந்தவொரு அச்சுறுத்தலையும் முப்படைகளும் இணைந்து ஒற்றை சக்தியாக எதிர்கொள்ள முடியும். இது வளங்களை மிச்சப்படுத்துவதுடன், போர்க்காலங்களில் மிக விரைவான முடிவுகளை எடுக்கவும் வழிவகுக்கும்.