ரோடும் இல்ல.. தண்ணியும் இல்ல.. நடு வயலில் கட்டப்பட்ட பாலத்தால் அதிர்ச்சி..

By John A

Published:

வட இந்திய மாநிலமான பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்திருக்கும் நிதிஷ் குமார் பிரதமர் மோடி 3-வது முறையாகப் பொறுப்பேற்றதில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும் பெரும் பங்கு உள்ளது.

மேலும் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் பா.ஜ.க-வுக்கு ஆதரவு கொடுத்தார் நிதீஷ்குமார். இந்நிலையில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பீகாருக்கு அதிக அளவிலான நிதியை ஒதுக்கினார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இது நாடு முழுவதும் பெரும் விவாதத்திற்குள்ளானது. மேலும் பீகாருக்கே அதிக அளவிலான வளர்ச்சித் திட்டங்களையும் அறிவித்தார்.

டைட்டானிக் கப்பலில் உயிரிழந்த நபர்.. 40 ஆண்டுகளுக்கு முன்பே அவருக்கு கிடைத்த எச்சரிக்கை.. மர்ம பின்னணி..

இந்நிலையில் அண்மைக்காலமாக பீகாரில் பொதுப்பணித்துறையின் சார்பில் கட்டப்படும் கட்டிடங்களின் உறுதித் தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. இதுவரை புதிதாகக் கட்டப்பட்ட பல பாலங்கள் உடைந்துள்ளன. இது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. தற்போது இதையெல்லாம் மிஞ்சும் வகையில் வயல்காட்டிற்கு நடுவே பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் சாலையே இல்லாத வயல் வெளியில் பாலம் கட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் புகைப்படம் வெளியாகி வைரலாகும் நிலையில் தற்போது இதற்கு அரசு விளக்கம் அளித்துள்ளது. அந்தப் பகுதியில் 3 கோடி செலவில் பாலம் அமைக்கத் திட்டமிட்டதாகவும், அதில் தனியார் நிலம் வருவதால் சாலை அமைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்திருக்கின்றனர். தற்போது நில உரிமையாளர் சாலை அமைக்க நிலம் கொடுக்கத் தயாராக உள்ள நிலையில் விரைவில் இதற்கான பணிகள் துவங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...