வாரத்தில் 90 மணி நேரம் வேலை.. பேச்சுக்கு கடும் எதிர்ப்பு.. பின் வாங்கிய எல் & டி சுப்பிரமணியன்

டெல்லி: சீனர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்கிறார்கள், அதே நேரத்தில் அமெரிக்கர்கள் வாரத்திற்கு 50 மணிநேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள். அதனால் சீனா வளர்ந்துள்ளது. எனவே நாமும் முயற்சித்தால் முடியும் என்ற…

வாரத்தில் 90 மணி நேரம் வேலை.. பேச்சுக்கு கடும் எதிர்ப்பு.. பின் வாங்கிய எல் & டி சுப்பிரமணியன்

டெல்லி: சீனர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்கிறார்கள், அதே நேரத்தில் அமெரிக்கர்கள் வாரத்திற்கு 50 மணிநேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள். அதனால் சீனா வளர்ந்துள்ளது. எனவே நாமும் முயற்சித்தால் முடியும் என்ற நோக்கில் தான் எல் & டி தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தனது கருத்தில் இருந்து அவர் பின்வாங்கியுள்ளார்.

பிரபல நிறுவனமான லார்சன் அண்ட் டர்போ (எல் அண்ட் டி) தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன், தனது ஊழியர்களுடன் நடந்த கலந்துரையாடலில், ஞாயிற்றுக்கிழமைகள் வீட்டில் உட்கார்ந்து என்ன செய்கிறீர்கள்?. உங்கள் மனைவியை எவ்வளவு நேரம் உற்றுப்பார்க்க முடியும்?. மனைவிகள் தங்கள் கணவர்களை எவ்வளவு நேரம்தான் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். அலுவலகத்திற்கு சென்று வேலை செய்யத் தொடங்குங்கள். உண்மையைச் சொன்னால், ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களை வேலை செய்ய வைக்க முடியாததற்கு நான் வருந்துகிறேன்.

ஞாயிற்றுக்கிழமைகளில் நான் வேலை செய்கிறேன். உங்களையும் வேலை செய்ய வைத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று தெரிவித்தார். எஸ்.என்.சுப்பிரமணியனின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே உள்ளிட்ட பிரபலங்களும் விமர்சித்தனர்.

இதனிடையே எல் அண் டி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 80 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவின் உள்கட்டமைப்பு, தொழில்கள் மற்றும் தொழில்நுட்ப திறன்களை நாங்கள் வடிவமைத்து வருகிறோம். எங்கள் நிறுவன தலைவரின் கருத்துகள் இந்த பெரிய லட்சியத்தை பிரதிபலிக்கின்றன. அவர் எங்கள் ஊழியர்களை கடினமாக உழைக்க ஊக்குவித்தார்.

சீனா அதன் வலுவான பணி நெறிமுறையால் அமெரிக்காவை முந்த முடியும் என்று கூறிய ஒரு சீனருடன் அவர் நடத்திய உரையாடலைப் பற்றி பேசினார். சீனர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்கிறார்கள், அதே நேரத்தில் அமெரிக்கர்கள் வாரத்திற்கு 50 மணிநேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள். அதனால் சீனா வளர்ந்துள்ளது. எனவே நாமும் முயற்சித்தால் முடியும் என்ற நோக்கில்தான் ” இவ்வாறு கூறினார்.