அரியானாவில் மனைவியை பிரிய ஜீவனாம்சமாக ரூ.3 கோடி தந்த 70 வயது பண்ணையார்..ஏன் தெரியுமா?

டெல்லி: அரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தை சேர்ந்த வசதிபடைத்த பண்ணையாளர் ஒருவர் விவாகரத்து மூலம் மனைவியை பிரிய விரும்பினார்.அவருக்கு தற்போது 70 வயது ஆகிறது. 44 வருடம் மனைவியுடன் வாழ்ந்த அவர், மனைவியை பிரிய…

70-year-old farmer in Haryana pays Rs. 3 crore as alimony to his wife

டெல்லி: அரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தை சேர்ந்த வசதிபடைத்த பண்ணையாளர் ஒருவர் விவாகரத்து மூலம் மனைவியை பிரிய விரும்பினார்.அவருக்கு தற்போது 70 வயது ஆகிறது. 44 வருடம் மனைவியுடன் வாழ்ந்த அவர், மனைவியை பிரிய விரும்பினார். அதற்காக அவர் ரூ.3 கோடியை ஜீவனாம்சமாக வழங்கியிருக்கிறார்.

‘ஐம்பதிலும் விவகாரத்து வரும் என்பதை 70 வயதிலும் வரும் என்று மாற்றிவிடலாம்.. கருத்து வேறுபாடு ஏற்பட்டால் விவாகரத்து எந்த வயதிலும் ஏற்படும் என்பதை நிரூபிக்கும் வகையில்அரியானாவில் சம்பவம் நடந்துள்ளது.

அரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தை சேர்ந்த வசதிபடைத்த பண்ணையார் ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 1980-ம் ஆண்டு திருமணம் நடந்தது. மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை தொடங்கிய அந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் பிறந்தனர்.
நன்றாக சென்று கொண்டு இருந்த அவர்களது திருமண வாழ்க்கையில் 44 வருடங்களுக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக புயல் வீசத்தொடங்கியது. வாய்வார்த்தையில் ஏற்பட்ட விரிசல் பெரும் பிளவாக மாறியது.

மனைவியிடம் இருந்து தனக்கு விவகாரத்து வேண்டும் என்று கோரி, அரியான மாநிலம் கர்னால் மாவட்ட குடும்பநல கோர்ட்டில் கடந்த 2006-ம் ஆண்டு அந்த பண்ணையார் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு அவரது கோரிக்கையை நிராகரித்தது. இதையடுத்து கடந்த 2013-ம் ஆண்டு சண்டிகாரில் உள்ள ஐகோர்ட்டில் அந்த பண்ணையார் வழக்கு தொடர்ந்தார். இந்த விவாகரத்து வழக்கு கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. அவர்கள் இருவரையும் பேசி ஒன்றுமைப்படுத்த நடந்த முயற்சி கள் தோல்வி அடைந்தது. இதையடுத்து அவர்களுக்கு விவாகரத்து வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.

அதே நேரம் அவரது மனைவிக்கு ஜீவனாம்சமாக ரூ.3.7 கோடி வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. அதை ஏற்றுக்கொண்ட அந்த பண்ணையார் ரூ.2.16 கோடி மதிப்புள்ள நிலம், ரூ.50 லட்சம் ரொக்கம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகள் உள்பட ரூ.3.7 கோடியை ஜீவனாம்சமாக மனைவிக்கு வழங்கினார். தற்போது அந்த பண்ணையாருக்கு 70 வயதாகிறது. அவருடைய மனைவிக்கு 73 வயது ஆகிறது. இந்த விவாகரத்து மூலம் அவர்களின் 44 ஆண்டு திருமண வாழ்க்கையும் முடிவுக்கு வந்துவிட்டது. வாழ்க்கையில் இகோ வந்துவிட்டால் எந்த வயதிலும் கணவன் மனைவி பிரிந்துவிடுவார்கள் என்பதற்கு இந்த வழக்கு உதாரணமாக பார்க்கப்படுகிறது.