18 வயதில் மறைந்து போன தனது மகனுக்காக தந்தை செய்த சம்பவம் தொடர்பான செய்தி தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வருவதுடன் அதன் பின்னணி பலரையும் கண்கலங்கவும் வைத்துள்ளது. எப்போதுமே தங்களது பிள்ளைகள் அவர்களின் வாழ்நாளில் மிக முக்கியமான உயரத்தை பிடித்து பல சாதனைகளை செய்ய வேண்டும் என்று தான் அனைத்து பெற்றோர்களும் நினைப்பார்கள்.
ஆனால் அப்படி நினைக்கும் பிள்ளைகள் திடீரென மறைந்தால் எப்படி இருக்கும். இந்தியாவை சேர்ந்த நவீன் கம்போஜ் என்பவர் அப்படி ஒரு துயரத்தை சந்தித்துள்ளார். இவரது மகன் கரன். கடந்த ஆண்டு ஹோலி பண்டிகையின் போது 18 வயதான கரன், கார் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். மகனது இழப்பை தாங்க முடியாமல் துடித்து போன நவீன் கம்போஜ் மற்றும் குடும்பத்தினர் இன்னும் அந்த துயரத்தில் இருந்து வெளியே வராமல் தவித்தும் வருகின்றனர்.
அப்படி இருக்கையில் சொர்க்கத்தில் இருக்கும் தனது மகனின் நினைவாக மிக முக்கியமான ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்றும் நவீன் கம்போஜ் முடிவெடுத்துள்ளார். கரணுக்கு 18 வயதாக இருந்த போது அவருக்கு கால்பந்து வீரராக வரவேண்டும் என்று ஆசை இருந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் நவீனோ தனது மகன் மாடலிங் துறையில் கலக்க வேண்டுமென முடிவெடுத்துள்ளார்.
மகனுக்கு நேர்ந்த துயரம்..
கரன் மறைந்து போனதால் நிறைவேறாமல் போன ஆசையை தான் நிறைவேற்றி மகனுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நவீன் கம்போஜ் முடிவெடுத்துள்ளார். இதனிடையே மகன் மறைந்து ஒரு வருடமான நினைவின் போது தனக்குத்தானே ஒரு சத்தியத்தையும் செய்து கொண்டுள்ளார் நவீன்.
மகனால் முடியாமல் போன மாடலிங் ஆசையை தான் நிறைவேற்றி மகனுக்கு சமர்ப்பிக்க முடிவெடுத்த நவீன் கம்போஜ், 100 கிலோவுக்கு மேல் எடை இருந்ததால் கடினமாக உழைத்து குடும்பத்தினர் உறுதுணையுடன் அதை குறைத்துள்ளார். மாடலிங் துறையில் பிரபலமாக இருக்கும் தினேஷ் மோகன் என்பவர் உதவியுடன் தன்னை தயார் செய்த நவீன் கம்போஜ், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாடலாக Ramp Walk செய்து அசத்தி இருந்தார்.
மகனுக்காக தந்தை செஞ்ச விஷயம்..
இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், இந்த சம்பவம் பற்றி உருக்கமாக பதிவில் குறிப்பிட்டிருந்த நவீன் கம்போஜ், “எனது மகன் மறைவால் ஒரு வருடம் இருட்டில் இருந்தது போல தோன்றியது. மகனது ஆசையை நான் நிறைவேற்ற வேண்டும் என்றும் மனதில் நினைத்தேன். கால்பந்து வீரராக வரவேண்டும் என்ற மகனின் ஆசையை எனது வயது காரணமாக நிச்சயம் நிறைவேற்ற முடியாது.
அதனால் ஒரு மாடலாக வேண்டும் என்று விரும்பி அதற்கான முயற்சிகளில் இறங்கிய எனக்கு குடும்பத்தினர் அனைவரும் உறுதுணையாக இருந்தனர். அப்போது தான் கடவுளாக அனுப்பி வைத்த தினேஷ் மோகனின் உதவி கிடைக்க என்னை மெல்ல மெல்ல மாடலாக மாற்றி அவரது நிகழ்ச்சியிலும் ரேம்ப் வாக்கில் கலந்து கொண்டேன்” நவீன் கம்போஜ் குறிப்பிட்டுள்ளார்.