25வது திருமண விழாவில் டான்ஸ் ஆடும்போது ஏற்பட்ட விபரீதம்.. தொழிலதிபர் மரணம்..!

  டெல்லியை சேர்ந்த ஒரு தொழிலதிபர் தனது 25வது திருமண நாளை மனைவியுடன் சேர்ந்து கொண்டாடிக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட விபரீதம் காரணமாக உயிரிழந்த சம்பவம், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும்…

marriage

 

டெல்லியை சேர்ந்த ஒரு தொழிலதிபர் தனது 25வது திருமண நாளை மனைவியுடன் சேர்ந்து கொண்டாடிக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட விபரீதம் காரணமாக உயிரிழந்த சம்பவம், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த செருப்பு உற்பத்தி மற்றும் விற்பனை தொழிலை நடத்தும் தொழிலதிபர் வசீம் சர்பத் (வயது 50), தனது 25வது திருமண நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்து, மண்டபம் ஒன்றை ஏற்பாடு செய்து உறவினர்களுக்கெல்லாம் அழைப்பிதழ் அனுப்பினார்.

விழா நடந்த போது, தனது மனைவியுடன் ஆடம்பர உடையில் வந்த அவர், ஒரு கட்டத்தில் கொண்டாட்டத்தின் உச்சத்தில் மனைவியுடன் சேர்ந்து டான்ஸ் ஆடினார். அவரது டான்ஸுக்கு உறவினர்கள் கைதட்டி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

அந்த நிலையில் திடீரென மேடையில் அவர் சரிந்தார். உடனடியாக உறவினர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திடீரென ஏற்பட்ட மாரடைப்பே அவரது மரணத்திற்கு காரணம் என பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

25வது திருமண நாளை மனைவியுடன் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என விரும்பி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த வசீம், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தது அவரது உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தால் அவரது குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.