19 நிமிட வைரல் காணொலியை பகிர்ந்தால் 7 வருடம் வரை சிறை.. காவல்துறை எச்சரிக்கை..!

சமூக வலைதளங்களில் ஒரு 19 நிமிடங்கள் மற்றும் 34 வினாடிகள் நீளமுள்ள ஒரு காணொலி, கடந்த நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் இருந்து வேகமாக பரவி வருகிறது. ஒரு இளம் ஜோடி நெருக்கமாக இருக்கும்…

video1

சமூக வலைதளங்களில் ஒரு 19 நிமிடங்கள் மற்றும் 34 வினாடிகள் நீளமுள்ள ஒரு காணொலி, கடந்த நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் இருந்து வேகமாக பரவி வருகிறது. ஒரு இளம் ஜோடி நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த காணொலியின் ஆதாரம் இன்னும் அறியப்படாத நிலையில், இந்த காணொலியை அந்த ஜோடி தாமாகவே வெளியிட்டதா அல்லது இது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதா என்பதும் உறுதி செய்யப்படவில்லை. இந்த சூழலில், காவல்துறையினர் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், இந்த காணொலியை பகிர வேண்டாம் என்றும் பொதுமக்களை கேட்டு கொண்டுள்ளனர்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் சைபர் பிரிவு அதிகாரி அமித் யாதவ் அவர்கள், இந்த 19 நிமிட வைரல் காணொலி குறித்து தெளிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த காணொலி செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட காணொலி என்று அவர் உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன், சில பயனர்கள் இதே காணொலியின் ‘பாகம் 2’ மற்றும் ‘பாகம் 3’ என்று கூறி சில கிளிப்களை பரப்ப தொடங்கியுள்ளதாகவும், அவையும் AI மூலம் உருவாக்கப்பட்டதாகவே தோன்றுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு காணொலி AI மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை கண்டறிய, ‘sightengine’ என்ற இணையதளம் உள்ளதாகவும் அந்த அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். பயனர்கள் பலரும் தொடர்ந்து இந்த காணொலியை பல்வேறு தளங்களில் பதிவேற்றம் செய்து வருவதாலும், மற்றவர்களுக்கு பகிரப்படுவதாலும் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். எந்த வடிவத்திலும் இந்த காணொலியை பகிர்வதை தவிர்க்குமாறு அவர் பொதுமக்களை கேட்டு கொண்டுள்ளார்.

இந்த 19 நிமிட வைரல் காணொலியை பகிர்ந்தால் என்ன நடக்கும் என்பதையும் அதிகாரி அமித் யாதவ் விளக்கினார். இணையத்தில் ஆபாசமான அல்லது ஆட்சேபனைக்குரிய காணொலிகளை பகிர்வது இந்தியச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 67-இன் கீழ், ஆபாசமான உள்ளடக்கத்தை பகிர்வது, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படலாம்.

அதேபோல, பாலியல் ரீதியாக வெளிப்படையான உள்ளடக்கத்தை பகிர்வது, ஐடி சட்டம் பிரிவு 67A-இன் கீழ், முதல் முறையாக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்க வழிவகுக்கும். இதே குற்றத்தை பலமுறை செய்தால், ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த செயல்கள் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவுகள் 292, 293 மற்றும் 354C ஆகியவற்றின் கீழும் தண்டனைக்குரியவை ஆகும். எனவே இந்த காணொலியை பகிர்வது என்பது தனிப்பட்ட உரிமையை மீறுவதாகும் என்றும், இந்த கிளிப்பைக் காணும் எவரும் அதை பிறருக்கு அனுப்பவோ அல்லது பதிவேற்றவோ கூடாது என்றும் அந்த அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.