வெறும் 40 ரூபாய் கட்டினால் 2 லட்சம் தரும் மத்திய அரசு.. பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம்

By Keerthana

Published:

டெல்லி: மாதம் வெறும் 40 ரூபாய் கட்டினால் ரூ.2 லட்சம் காப்பீடு தருகிறது மத்திய அரசு. பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana) திட்டத்தின் பலன்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்..

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டம் என்பது பொருளாதார ரீதியாக பின் தங்கிய மக்களுக்கு காப்பீடு தரும் திட்டம் ஆகும். ரூ.2 லட்சம் ரூபாய்க்கு மருத்துவக் காப்பீட்டு தரப்படுகிறது.

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா (PMJJBY) திட்டத்தின் பலன் பெற வருடத்துக்கு நீங்கள் 436 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும்.. அதாவது மாத மாதம், ரூ.40க்கும் குறைவாக பணம் கட்டினாலே உங்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு கிடைக்கும். பாலிசிதாரர் உயிரிழந்துவிட்டால், நாமினி அல்லது குடும்பத்தை சேர்ந்தவருக்கு ரூ.2 லட்சம் வழங்குகிறது மத்திய அரசு.

இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கணக்கீடு எப்படி இருக்கும் என்றால் ஜூன் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஒவ்வொரு ஆண்டும் மே 31ம் தேதிக்குள் வங்கி அல்லது போஸ்ட் ஆபிஸ் கணக்கில் இருந்து ஆண்டுக்கு ரூ.436 டெபிட் செய்யும் வசதி உள்ளது.

இந்த பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தில் இணைய , 18 வயது முதல் 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த காப்பீடு திட்டம் என்பது ஒரு வருடத்திற்கு மட்டுமே இன்சூரன்ஸ் கவரேஜ் தரக்கூடியது., எனவே பாலிசியை வருடந்தோறும் புதுப்பித்து கொள்ள வேண்டும்.

இந்தத் திட்டத்தை எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் மட்டுமின்றி அஞ்சல் அலுவலகங்களில் தனிப்பட்ட கணக்கு வைத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும் இந்த திட்டத்தில் இணைய முடியும். ஒருவேளை உங்களது வங்கி கணக்கு மூடப்பட்டாலோ அல்லது ப்ரீமியம் வசூலிக்கும் சமயத்தில் போதுமான பணம் வங்கி கணக்கில் இல்லாமல் இருந்தாலோ, இந்த காப்பீடு காலாவதியாகி விடும்.

உங்களுக்கு பல வங்கிகளில் சேமிப்பு கணக்கு இருக்கிறது என்றால், அதற்காக நீங்கள் எல்லா வங்கிகளிலுமே, இந்த திட்டத்தினை தொடங்க முடியாது. காரணம், ஒருவருக்கு இந்த திட்டத்தின் மூலம் ஒரு பாலிசி தான் எடுக்க முடியும். எனவே, இந்த திட்டத்திற்கு தகுதியான ஒருவர், உங்களுக்கு அருகில் உள்ள ஒரு வங்கி மூலம் இணைந்து கொள்ளலாம்… இந்த பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தில் சேர, வங்கி கணக்குடன் வங்கி கணக்கோடு ஆதார் நம்பரையும் கட்டாயம் இணைக்க வேண்டியது கட்டாயம்.

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா திட்டத்தில் இணைந்த ஒருவர் திடீரென இறந்துவிட்டால், அவரது நாமினி சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். பாலிசிதாரரின் இறப்புச் சான்றிதழை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் க்ளைம் செய்வதற்கு, இறப்பு சான்றிதழ் மட்டுமல்லாமல், மருத்துவமனை ரசீது, (Discharge Receipt) போட்டோ, கேன்சல் செய்யப்பட்ட செக் லீப், நாமினியின் வங்கிக் கணக்கு என பல சம்பந்தப்பட்ட ஆவணங்களை தர வேண்டும். இன்சூரன்ஸ் நிறுவனம் உங்களது ஆவணங்களை சரிபார்த்து பிறகு, காப்பீட்டு பண 30 நாட்களில் வழங்கிவிடும்.