முதல்முறையாக இந்தியாவிடம் தோல்வி அடைந்த அமெரிக்கா.. பூமராங் போல் அமெரிக்காவை திருப்பி அடிக்கும் வர்த்தக போர்.. இது பழைய இந்தியான்னு நினைச்சியா டிரம்ப்.. இது மோடி இந்தியா.. ஒன்னும் அசைக்க முடியாது..!

டொனால்ட் டிரம்ப்பின் வரிக் கொள்கைகள் காரணமாக அமெரிக்காவின் மொத்தவிலை கிட்டத்தட்ட 1% அதிகரித்துள்ளது. இது மூன்று ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச உயர்வு ஆகும். உற்பத்தி விலை குறியீடு (Producer Price Index) ஆண்டுக்கு ஆண்டு…

india 1

டொனால்ட் டிரம்ப்பின் வரிக் கொள்கைகள் காரணமாக அமெரிக்காவின் மொத்தவிலை கிட்டத்தட்ட 1% அதிகரித்துள்ளது. இது மூன்று ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச உயர்வு ஆகும். உற்பத்தி விலை குறியீடு (Producer Price Index) ஆண்டுக்கு ஆண்டு 3.3% உயர்ந்துள்ளது. இதில், சேவைகள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் தளபாடங்கள், ஆடைகள் போன்ற இறக்குமதிப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

வர்த்தகப் போர்: நுகர்வோருக்குச் சுமை

அமெரிக்கா விதித்துள்ள வரிகள் காரணமாக வர்த்தக நிறுவனங்கள், இந்த செலவுகளை நுகர்வோர் மீது சுமத்த தொடங்கியுள்ளன. இதனால் வரும் மாதங்களில் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. வரிகள் திரும்ப பெறப்படாவிட்டால், அமெரிக்க குடும்பங்களின் நிதி நிலைமையில் மேலும் அழுத்தம் ஏற்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

விலை உயர்வுக்கான காரணங்கள்:

டிரம்ப் நிர்வாகம் இந்திய பொருட்கள் மீது விதித்த அதிக வரிகள், இறக்குமதி பொருட்களின் விலைகளை நேரடியாக உயர்த்தியுள்ளன.

வர்த்தகக் கொள்கைகள், விநியோகச் சங்கிலியைப் பாதித்து, உற்பத்தி மற்றும் விநியோகச் செலவுகளை அதிகரித்துள்ளன.

இந்த மொத்த விலை உயர்வு, எதிர்காலத்தில் சில்லறை விற்பனை விலைகளையும் உயர்த்தி, பணவீக்கத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, வர்த்தக போரால் ஏற்படும் இந்த விலை உயர்வு, அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு தடையாக இருக்கலாம். அமெரிக்க அரசு இந்த வரிக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்யாவிட்டால், நுகர்வோர் மற்றும் தொழில்துறையினர் இருவருக்கும் தொடர்ந்து சுமை ஏற்படும்.

மொத்தத்தில் வர்த்தக போரில் இந்தியாவிடம் அமெரிக்கா தோல்வி அடைந்துள்ளது. அனேகமாக இது அமெரிக்காவின் முதல் தோல்வியால் கூட இருக்கலாம்.. அதற்கு இந்தியா பழைய மாதிரி இல்லை என்பதும், சக்தி வாய்ந்த தலைவர்கள் இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் டிரம்ப் இந்நேரம் புரிந்து கொண்டிருப்பார்.