இந்திய குடியுரிமை பெற, இந்திய எழுத்தாளர் ஒருவரை காதலித்து, அவரை திருமணம் செய்து, இந்தியாவிலேயே செட்டிலாக ஆபாசப் படம் நடிகை ஒருவர் முயற்சி செய்ததாக கூறப்படும் நிலையில், அவர் இந்திய குடியுரிமை பெறும் நோக்கத்தில் எழுத்தாளரை போலியாக காதலித்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பிரபலமான ஆபாசப் பட நடிகை கேந்த்ரா லஸ்ட். இவர் இந்திய குடியுரிமை பெறும் நோக்கத்தில், கொல்கத்தாவைச் சேர்ந்த இளம் எழுத்தாளர் த்ரிஷிதா பானர்ஜியுடன் காதல் கொண்டதாகவும், ஒரு கட்டத்தில் அந்த காதல் போலியானது என்றும், அவர் தனது காதலை வெளிப்படுத்துவதற்கு பதிலாக அவ்வப்போது தனது குடியுரிமை குறித்த கேள்விகளை காதலனிடம் கேட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்திய கலாச்சாரத்தின் மேல் ஈடுபாடு காரணமாக கொல்கத்தா வந்ததாகவும், இந்தியாவிலேயே தங்கி வாழ விரும்புவதாகவும், அதனால் ஒரு இந்தியரை திருமணம் செய்து கொண்டு, ஒரு இந்திய குடிமகனாக வாழ விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், அவருக்கு நெருக்கமானவர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்த நிலையில், இந்திய குடியுரிமை பெறுவதற்காகவே அவர் போலியாக ஒருவரை காதலித்ததாகவும், இந்திய குடியுரிமை பெற்றவுடன் அவரது சுயரூபம் தெரியும் என்றும் கூறி வருகின்றனர்.
இது குறித்து நடிகையும், அவரை காதலிக்கும் எழுத்தாளரும் எந்தவிதமான விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை என்றாலும், நெட்டிசன்கள் இதற்கு ரியாக்ட் செய்து வருகின்றனர்.
“எழுத்தாளரை குடியுரிமைக்காக உபயோகித்தாரா?” என்று பலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றும், போலியான காதல் என்றால் இந்திய குடியுரிமைக்கு அவருக்கு வழங்க கூடாது என்றும் பல நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.