இப்போதெல்லாம் மனிதர்கள் எப்பப் பார்த்தாலும் டென்ஷன் டென்ஷன் டென்ஷன்னு மாறிட்டாங்க. கொஞ்சம் பிரஷர் இருந்தாலே நமக்கு தலைகால் புரியாது. அதிகமாக இருந்தால் எதற்கெடுத்தாலும் கோபம், டென்ஷன் தான் வரும். மாறிவரும் நவீன யுகத்தில் காலைலருந்தே நைட் படுக்கைக்குச் செல்லும் வரை மனிதர்களை ஏதாவது ஒரு டென்ஷன் பிடித்து ஆட்டி விடுகிறது.
பள்ளியில் சக மாணவர்கள்- ஆசிரியர்கள், வீட்டில் மனைவி, கணவன், அலுவலகத்தில் ஊழியர்கள், முதலாளி என யாரைப் பார்த்தாலும் நமக்குள் ஒரு வித டென்ஷன் வந்து விடுகிறது. அவரவர் வேலைகளைச் சரியாகச் செய்தால் டென்ஷன் வர வாய்ப்புக் குறைவு.
அதிக அழுத்தத்தை ஆங்கிலத்தில் ஹைப்பர் டென்ஷன் என்கிறார்கள். சாதாரணமாக மனிதனுக்கு 80 முதல் 120க்குள் பிரஷர் இருக்க வேண்டும். இல்லேன்னா தமனிகள் ரத்த நாளங்களோட சுவர்களைச் சேதப்படுத்தி தீவிர ரத்த அழுத்தத்தை உணரச் செய்யும்.
இதன் காரணமாக அடைப்பு ஏற்பட்டால் இதயத்திற்கு தேவையான ரத்த ஓட்டம், ஆக்சிஜனை செல்ல அனுமதிக்காது. தீவிரத் தாக்குதலை உண்டாக்கி உயிரையேக் கொன்றுவிடும். அதனால அதிக பிரஷர் தானே என அசால்டாக இருந்தா அபாயகரமான பக்கவாதமும், மாரடைப்பும் ஏற்படும் என நிபுணர்கள் சொல்கின்றனர்.
இந்தப் பாதிப்பு எதுவுமே மெடிக்கல் செக் அப் செய்யாததால அறிந்திருக்க மாட்டீர்கள் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதனால தான் உயர் ரத்த அழுத்தத்தை ஒரு சைலன்ட் கில்லர் என்கின்றனர். அதனால உடனே மருத்துவர்களை அணுக வேண்டும் என்பதையும் எச்சரிக்கின்றனர்.
ரத்த அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கும்போது மருத்துவர்களைப் போய் கட்டாயமாகப் பார்க்க வேண்டும். கடும் தலைவலி, மங்கலான பார்வை, மன தெளிவின்மை, மூச்சுத்திணறல், எப்பவுமே சோர்வாக இருப்பது, குமட்டல் என வந்து விட்டால் அசால்ட்டா இருந்துடாதீங்க. இவை தான் நமது உயர் ரத்த அழுத்தத்திற்கான ஆபத்தான அறிகுறிகள்.
வயது மூப்பு, உடல் எடை அதிகரிப்பு ஆகிய பல காரணங்களால அதிக பிரஷர் வரும். அதன்படி அதிகளவிலான உப்போ சோடியம் நிறைஞ்ச உணவுகளையோ சாப்பிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
உங்களால் முடியுமானால் வாரத்திற்கு ஒருமுறையாவது உப்பு சேர்க்காத உணவை சாப்பிட்டு வாருங்கள். உப்பு அதிகமாக சேர்ப்பதால ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி இதயத்திற்குப் பெரிய பாதிப்புகளை உண்டு பண்ணும்.
ரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு மதுப்பழக்கத்திற்கும் அடிமையாக இருப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மதுவிலிருந்து விடுபட வேண்டும். கட்டுப்பாடற்ற இந்த ஹைபர் டென்ஷன் உள்ளவங்க தினமும் தியானமும் நல்ல பாடல்களையும் கேட்க வேண்டியது அவசியம்.
உடலையும் மனசையும் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க வேண்டுமானால் உடற்பயிற்சி ஒன்றே தான் எளிய வழி. தொடர்ந்து உடற்பயிற்சி செய்யறதால இதயத்தோட ஆரோக்கியத்தையும் ரத்த ஓட்டத்தையும் சீராக வைத்துக் கொள்ளலாம்.