தண்ணீரில் உள்ள மருத்துவ குணங்களை இத்தனையா?

By Staff

Published:

4216c62adce877506d8edefe90c15702

தண்ணீரினை நாம் காசு கொடுத்து வாங்கிக் குடிக்க வேண்டியதில்லை, அனைவருக்கும் இலவசமாக கிடைக்கும் ஒரு அற்புதமான வரப் பிரசாதம்தான் தண்ணீர். அத்தகைய தண்ணீரில் உள்ள மருத்துவ குணங்கள் எவை என்று இப்போது பார்க்கலாம்.

தண்ணீரை தினமும் காலையில் பல் துலக்கியதும் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் அளவு குடித்தால் மலச் சிக்கல் பிரச்சினைகள் சீராகும் மேலும் உடல் கழிவுகளை இது எளிதில் அகற்றிவிடும், மேலும் உடல் எடையினைக் குறைக்க நினைப்போர் தண்ணீரை அதிக அளவில் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

அதிலும் சாதாரண நீரைவிட சூடான நீரை எடுத்துக் கொள்வது நல்லது, இது உடல் எடையினை விறுவிறுவென குறைக்கும். மேலும் சாப்பிடுவதற்கு முன்னர் தண்ணீர் அருந்திவிட்டு உணவு உட்கொண்டால் செரிமான சக்தியானது அதிகமாக இருக்கும்.

மேலும் நீரை எந்த அளவு அதிகமாக எடுத்துக் கொள்கிறோமோ அந்த அளவு நமது தோலின் வளம் மேம்பட்டு நம் தோல் பளபளக்கும். 

மேலும் தண்ணீர் உடல் சூட்டினைத் தணித்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது.  மேலும் தண்ணீர் குடலினை சுத்தம் செய்வதிலும், இரத்தத்தைச் சுத்தம் செய்வதிலும் முக்கிய பங்காற்றுகின்றது. 

Leave a Comment