வல்லாரைக் கீரையின் நன்மைகள் இத்தனையா?

By Staff

Published:

c811b3e4c6f21838e794b09ba66a953a

வல்லாரைக் கீரை ஞாபக சக்தியினை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமாகும். வல்லாரையில் பொதுவாக சட்னி செய்து சாப்பிடுவர், ஆனால் இதில் ஜூஸ் அல்லது டீ செய்துக் குடிக்கலாம்.

வல்லாரையினைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தல் இளநரை மறைந்து போகும். மேலும் சளித் தொல்லை, மார்புச் சளி போன்ற பிரச்சினைகளுக்கு வல்லாரையினை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

மேலும் வல்லாரையினைக் குழந்தைகளுக்குக் கொடுத்துவந்தால் அவர்களின் புத்திக் கூர்மை மேம்படுவதோடு, சுறுசுறுப்பாகவும் செயல்படுவர்.

மேலும் நரம்புத் தளர்ச்சி, கை கால் நடுங்குதல் போன்றவற்றினைச் சரிசெய்வது மட்டுமல்லாது ஒட்டு மொத்த நரம்பு மண்டலத்தினையும் சீர் படுத்துவதாக உள்ளது.

மேலும் மன அழுத்தப் பிரச்சினை இருப்பவர்கள் வல்லாரையினை எடுத்து வர நாளடைவில் மன அழுத்தம் குறையும். 
 
மேலும் வல்லாரை மிகச் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பொருளாக உள்ளது, இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கிறது.
 

Leave a Comment