அல்சருக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து.

By Staff

Published:


5601519768f8f439d67d04f31a474d58

வயதுவித்தியாசம் பார்க்காம எல்லாருக்கும் வரும் வியாதிகளில் அல்சர் புண் முக்கியமானது. சரியான நேரத்தில் உணவு சாப்பிடாததே வயிற்றுப்புண்ணுக்கு முக்கிய காரணம். உணவை செரிக்க சில அமிலங்கள் நமது வயிற்றில் சுரக்கின்றது. சரியான நேரத்தில் சாப்பிடாமல் வயிறு காலியாய் இருக்கும்போது அந்த அமிலத்தால் இரைப்பையின் சுவர்கள் அரிக்கப்பட்டு புண் ஏற்படுகின்றது. இந்த புண்ணினால் கடுமையான வயிற்றுவலி ஏற்படும். தொடக்கத்திலேயே கவனிக்கவில்லை எனில் கடுமையான பின்விளைவுகளையும் சந்திக்க நேரிடும். மருந்துகளை உட்கொள்வதை விட மிக எளிமையான வீட்டு வைத்தியத்தின் மூலம் சரிசெய்யலாம்.சில நேரம் உயிரிழப்பைக்கூட சந்திக்க நேரிடும்.

வயிற்றுப்புண்ணுக்கு வீட்டிலேயே செய்யப்படும் பழங்கால மருத்துவமுறையில் சிலவற்றை பார்க்கலாம்…

தினமும் சாதத்தில் தேங்காய் பால் ஊற்றி சாப்பிட்டு வர வயிற்று புண் சரியாகும். முட்டைகோஸ், பாகற்காய் மற்றும் முருங்கைகாயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலும் அல்சர் சரியாகும். காலையில் பிரட் மற்றும் வெண்ணெய் சாப்பிட்டால் வலி குறையும். தினமும் ஆப்பிள் ஜூஸ், அகத்திக் கீரை சாறு, பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தாலும் அல்சர் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். சிறந்த தீர்வு என்றால் அது நெல்லிக்காய் தான், நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்து குடித்து வந்தாலும் நிவாரணம் கிடைக்கும். தினமும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேனை ஊற்றி குடித்தாலும் அல்சரால் ஏற்படும் வயிற்று எரிச்சல் பிரச்சனை சரியாகும். பாக்டீரியா எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ள வெள்ளைப்பூண்டை தேன் கலந்து சாப்பிட்டாலும் அல்சர் சரியாகும். வெந்தயம் கலந்த டீ, கற்றாழை ஜூஸ் இதற்கு வயிற்றுப்புண்ணுக்கு நல்ல தீர்வாகும், குறிப்பாக அதிகளவு தண்ணீர் பருகுவதே சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.

எல்லாவற்றையும்விட நேரத்துக்கு உணவு உட்கொள்வதே வயிற்றுப்புண் வராமல் தடுக்கும். வந்தபின் அவதிப்படுவதைவிட, வரும்முன் காப்பதே சிறப்பு..

Leave a Comment