அசைவ பிரியர்களின் விருப்பப்பட்டியலில் மட்டன் சூப் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். இந்த மட்டன் சூப்பை மழைகாலத்தின் மாலையில் குடிக்க அருமையா இருக்கும். இந்த சூப்பினை அருந்துவதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன் ஹீமோகுளோபினும் அதிகரிக்கும்.
மட்டன் சூப் செய்வது மிக எளிது. மட்டன் சூப் செய்முறையை பார்க்கலாம்…
தேவையான பொருட்கள்:
ஆட்டு எலும்பு -750கி
வெங்காயம்-150 கிராம்
இஞ்சி, பூண்டு பேஸ்ட்- ஒரு டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
வறுத்து அரைக்க..
மிளகு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை
மட்டன் எலும்பு சூப் எப்படி செய்வது ?
வெறும் வாணலியில் மிளகு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலையை சிவக்க வறுத்தெடுத்து பொடியாக்கவும். பெரிய பாத்திரத்தில் எண்ணெயைச் சேர்த்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு பேஸ்டை சேர்த்து வதக்கவும். மட்டன் எலும்புகளுடன் அனைத்து மசாலா, எலும்புகள் பழுப்பு நிறமாக இருக்கும் வரை வெப்பத்தை அதிகரித்து சிறிது நேரம் கிளறவும். இப்போது உப்பு சேர்த்து, நன்கு கிளறி, வெதுவெதுப்பான நீரை படிப்படியாக ஊற்றவும். குறைந்த வெப்பத்தில் ஒரு மணி நேரம் தீயில் வைத்து நன்றாக கொதிக்க விட்டு அடுப்பை அணைத்துவிட்டு கொ.மல்லி இலைதூவி பரிமாறவும்..
குறிப்பு: குக்கரிலும் செய்யலாம் .. எலும்பு வதக்கி நீர் ஊற்றியபின் குக்கரை மூடி ஒரு விசில் வந்தபின் அடுப்பை சிம்மில் வைத்து 30 நிமிடம் வைத்து அடுப்பை அணைத்துவிட்டு, பிரஷர் இறங்கியதும் திறந்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.