கோடையில் ஏற்படும் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள்… இந்த வழிமுறையை பின்பற்றினால் தவிர்க்கலாம்…

இன்றைய காலகட்டத்தில் கோடை காலம் என்பது மிக அதிக வெப்பமாகவும் நீண்டதாகவும் இருக்கிறது. ஏப்ரல் மே மாதங்களில் வரக்கூடிய அதிகப்படியான வெப்பம் தற்போது மார்ச் மாதத்திலேயே வந்து விடுகிறது. கோடை காலத்தில் மக்களுக்கு உடல்…

heat

இன்றைய காலகட்டத்தில் கோடை காலம் என்பது மிக அதிக வெப்பமாகவும் நீண்டதாகவும் இருக்கிறது. ஏப்ரல் மே மாதங்களில் வரக்கூடிய அதிகப்படியான வெப்பம் தற்போது மார்ச் மாதத்திலேயே வந்து விடுகிறது. கோடை காலத்தில் மக்களுக்கு உடல் உபாதைகள் அதிகமாக ஏற்படும். அதில் ஒன்றுதான் வயிற்று சம்பந்தமான பிரச்சினைகளான வயிற்று வலி, வாந்தி வயிற்றுபோக்கு போன்றவை. இவற்றை தடுப்பதற்கு ஒரு சில வழிமுறைகள் இருக்கிறது. அதை கடைபிடித்தால் இந்த வயிற்று சம்பந்தமான பிரச்சினைகளை தவிர்க்கலாம். அதைப்பற்றி இனி காண்போம்.

வெயில் காலங்களில் அதிகப்படியான வியர்வை வெளியேறி உடம்பில் நீர்ச்சத்து குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதனால் தினமும் 3 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாக அருந்த வேண்டும். இது நம் வயிற்றையும் குளிர்ச்சி அடைய செய்யும். அடுத்ததாக எளிதில் அஜீரணம் ஆகக்கூடிய உணவுப் பொருட்களை கோடைகாலத்தில் சாப்பிட வேண்டும். இதனால் வயிற்று வலி போன்றவை வராமல் தடுக்கலாம்.

பதப்படுத்தப்பட்ட, எண்ணெய்யில் பொறித்த துரித உணவுகள் போன்றவற்றை இந்த கோடைகாலத்தில் சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும். இந்த உணவுகளை சாப்பிடுவதால் ஜீரணம் ஒழுங்காக நடைபெறாமல் வாந்தி நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படலாம். அதனால் அதிகப்படியான பழங்கள் காய்கறிகள் இயற்கை பானங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

இது தவிர வாரத்திற்கு ஒருமுறை கட்டாயம் எண்ணெய் தேய்த்து எண்ணெய் குளியல் எடுத்து வரும்போது நம் உடம்பு குளிர்ச்சி அடையும் மற்றும் வயிற்று சூடு தணியும். இது போன்ற விஷயங்களை கடைப்பிடித்தால் உங்களுக்கு வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் இந்த கோடைகாலத்தில் வராமல் தடுக்கலாம்.