உடல் எடையினை குறைக்க ஒரே மாதத்தில் குறைக்க தவிர்க்க வேண்டியவை!

By Staff

Published:

97b9240c4739bdf667b1f436562a30e7

உடல் எடையினை குறைக்க வேண்டும் என்று நம்மில் பலரும் போராடிக் கொண்டு இருப்போம். அதாவது ஜிம் வொர்க் அவுட், யுடியூப் வீடியோக்களை பின்பற்றுதல், பேலியோ டயட், கீட்டோ டயட் என பல வகை டயட்டுகள் என பலவற்றையும் பின்பற்றி தீர்வு காண முடியாமல் தளர்ந்து போய் இருப்போம்.

ஆனால் இப்போது நான் சொல்லப்போகும் சில டிப்ஸ்களைப் பின்பற்றினால் உடல் எடை வெகு விரைவில் குறைந்து போகும், அசைவ உணவுகளில் உள்ள கொழுப்புகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

அதேபோல் அரிசி, சர்க்கரை, உருளைக் கிழங்கு, வாழைக்காய், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு என கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்த்தல் வேண்டும். மேலும் எண்ணெயில் பொரித்த உணவு வகைகளுக்கு 144 தடை போட்டே ஆக வேண்டும்.

மேலும் நொறுக்குத் தீனி வகைகளை 100 சதவீதம் அளவு தவிர்த்துவிடுதல் வேண்டும்.  துரித உணவுகள் உடலுக்கு கேடு விளைவிப்பதோடு உடல் எடையினை விறுவிறுவென ஏற்றவும் செய்யும்.

மேலும் கெமிக்கல் கலந்த குளிர் பானங்கள், மதுபானங்கள் என அனைத்தையும் தூக்கி எறிந்துவிடுதல் வேண்டும்.  மேலும் இனிப்பு பலகாரங்களையும் சாப்பிடுதல் கூடாது.

Leave a Comment