
முட்டையில் அதிக அளவு புரதம் உள்ளது, இதில் உள்ள அதிக அளவு ஊட்டச் சத்து காரணமாகவே உடல்நிலை சரியில்லாதவர்கள், கடும் நோயில் இருந்து மீண்டவர்கள், குழந்தைகள் என அனைவருக்கும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
முட்டையின் மஞ்சள் கருவில் அதிக அளவு கொழுப்பு உள்ளதால், பலரும் அதனைச் சாப்பிடத் தயங்குகின்றனர். உண்மையில் சொல்லப் போனால் முட்டையின் மஞ்சள் கருவானது அதிக அளவில் நன்மையினை ஏற்படுத்தக்கூடியதாகவும் உள்ளது. முதியவர்களைத் தவிர்த்து பிறர் முட்டையின் மஞ்சள் கருவினை எடுத்துக் கொள்ளலாம்.
அதாவது முட்டையானது இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதாகவும், மேலும் உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் புரதச் சத்துமட்டும் போதும் என்றால் முட்டையின் வெள்ளைப் பகுதியினை மட்டும் சாப்பிடலாம்.
முடி உதிர்தல், புரதச் சத்து குறைபாட்டால் வறட்சியான சருமம் உடையவர்கள் என அனைவரும் தினசரிக்கு ஒன்று அளவில் முட்டையினை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். மேலும் உடல் எடையினைக் கட்டுக் கோப்பாக வைக்கும் ஆண்கள் முட்டையினை கட்டாயம் எடுத்துக் கொண்டால் அதன் மாற்றங்களைக் காண முடியும்.
சிக்கன், மட்டன், பாதாம் என அதிக விலை கொண்ட பொருட்களில் இருப்பதைவிட முட்டையில் சத்துக்கள் அதிகம்.

