புடலங்காய் நீர்க் காய்களில் ஒரு காய்கறியாக உள்ளது. இதன் நன்மைகள் குறித்து இப்போது நாம் பார்க்கலாம்.
புடலங்காயில் அதிக அளவில் நீர்ச் சத்து உள்ளதால் சிறுநீர்ப் பெருக்கத்தினை தூண்டுகின்றது. மேலும் சிறுநீரில் கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க புடலங்காயில் அவ்வப்போது பொரியல் செய்து சாப்பிட்டு வரவும்.
மேலும் புடலங்காய் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றுவதோடு, கெட்ட கொழுப்பினைக் குறைப்பதாகவும் உள்ளது. மேலும் இது மிகக் குறைந்த கலோரி கொண்ட உணவு என்பதால் பெரிய அளவில் செரிமானப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தாது.
குடல் புண், வயிற்றுப்புண், தொண்டைப்புண், நெஞ்செரிச்சல், வயிற்று எரிச்சல், சிறுநீர்க் கழிக்கும்போது எரிச்சல் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் விரைவில் மிகச் சிறந்த தீர்வினைப் பெறுவீர்கள்.
மேலும் பெண்கள் சார்ந்த பிரச்சினைகளில் முக்கிய பிரச்சினையான வெள்ளைப் படுதல் பிரச்சினை இருப்பவர்கள் வாரத்தில் இருமுறை என்ற அளவில் புடலங்காயினைப் பயன்படுத்த வேண்டும்.
நீரிழிவு நோயாளி, இரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள் புடலங்காயினை தயங்காமல் எடுத்துக் கொள்ளலாம். கோடை காலங்களில் சாப்பிட ஏற்ற காய்கறி வகைகளில் புடலங்காயும் ஒன்று.