கொண்டைக்கடலையில் பொதுவாக நாம் குழம்பு மற்றும் பொரியல் செய்து சாப்பிடுவோம், கொண்டைக் கடலையினை மற்றவர்கள் யாரும் விரும்பிச் சாப்பிடாமல் இருக்க மாட்டார்கள். அந்த அளவு கொண்டைக் கடலை சுவைமிக்கதாக இருக்கும், இத்தகைய கொண்டைக் கடலையின் சத்துகள் குறித்து பார்ப்போம்.
கொண்டைக் கடலையானது நோயெதிர்ப்பு சக்தியினை அதிகரித்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது, மேலும் இதில் சர்க்கரை அளவானது குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் நிச்சயம் எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் டயட்டில் இருப்பவர்கள் கொண்டைக் கடலையினை எடுத்துக் கொண்டால் உடல் எடை குறைவதோடு, உடலின் சக்தியினை அதிகரிப்பதாக உள்ளது. கொண்டைக் கடலை உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைப்பதாக உள்ளது.
மேலும் இது இரத்த சோகைக்கு மிகச் சிறந்த தீர்வினைக் கொடுப்பதாய் உள்ளது, மேலும் இது இரும்புச்சத்தினை அதிகமாகக் கொண்டு உள்ளது. இதனால் இரத்த சோகைப் பிரச்சினை உள்ளவர்கள் கட்டாயம் தினமும் இதனை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
மேலும் இரத்த அழுத்தத்தினைக் கட்டுக்குள் கொண்டுவர நினைப்போரும் கொண்டைக் கடலையினை நிச்சயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.