நிலக்கடலையின் மருத்துவ குணங்கள் இவைகள்தான்!!

By Staff

Published:

1f6ce7eb6cdb8cd6a4c6c148260dc1c4

நிலக்கடலையில் ஒமேகா 6 அதிகமாக உள்ளது, இது தலைமுடி கொட்டுவதைத் தடுத்து, தலைமுடி அடர்த்தியினை அதிகரிப்பதாக உள்ளது. மேலும் நிலக்கடலையில் உடல் எடையினை அதிகரிக்கச் செய்யும் கார்போஹைட்ரேட்டானது மிகக் குறைவாக உள்ளது. இதனால் உடல் பருமன் உள்ளவர்கள் இதனை தயங்காமல் எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் நிலக்கடலையில் புரதச் சத்து அதிக அளவில் இருப்பதால் டயட் இருப்பவர்கள் நிலக்கடலையினை வறுத்து சாப்பிடலாம் அல்லது நிலக்கடலை மிட்டாய்களை எடுத்துக் கொள்ளவும் செய்யலாம்.

குழந்தைகளுக்கு வேறு தின்பண்டங்களைக் கொடுப்பதைத் தவிர்த்து நிலக்கடலையில் பர்பு, இனிப்பு உருண்டை, லட்டு போன்றவற்றினை செய்து கொடுத்தால் உடல் வளர்ச்சி சீரான அளவில் இருக்கும்.
 
மேலும் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், 30 வயதினைக் கடந்த பெண்கள் என அனைவரும் தினசரிக்கு கைப்பிடியளவில் நிலக்கடலையினை எடுத்துக் கொள்வது நல்லது.

மேலும் நிலக்கடலையில் உள்ள போலிக் ஆசிட் பெண்களின் மலட்டுத் தன்மையினை சரிசெய்து கருவுறும் தன்மையினை அதிகரிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
 
இரத்தசோகை பிரச்சினை உள்ளவர்கள் நிலக்கடலை தொடர்ந்து சாப்பிட்டுவரும் பட்சத்தில் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அதிகரித்து இரத்த சோகைப் பிரச்சினைகள் சரியாகும்.
 
எலும்பு தேய்மானப் பிரச்சினை இருப்பவர்கள், நீண்டகால அளவில் நோய்வாய்ப்பட்டவர்களின் உடலினைத் தேற்ற நிலக்கடலையினை கொடுத்து வருதல் வேண்டும்.
 

Leave a Comment