தேங்காயின் மருத்துவ குணங்கள் இவைகள்தான்!!

By Staff

Published:

ec3e195ede0b3b6f26d37adc31446387-1

தேங்காயானது நம் வீட்டு சமையலில் அத்தியாவசியம் இருக்கும் ஒரு பொருளாகும், அதனை தினசரி என்ற அளவில் பயன்படுத்தினாலும் நம்மில் பலருக்கும் அதன் மருத்துவ குணங்கள் குறித்து தெரிந்திருப்பதில்லை. அத்தகைய தேங்காயின் மருத்துவ குணங்கள் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

தேங்காயில் அதிக அளவு கால்சியம் உள்ளதால் நிச்சயம் பற்கள் மற்றும் எலும்பின் வளர்ச்சியானது சிறப்பாக இருக்கும். 
 
மேலும் தேங்காயில் உள்ள கொழுப்புச் சத்தானது நமது சருமத்தினை பளபளவென்று ஆக்கும் தன்மை கொண்டுள்ளது, மேலும் இதனை முகத்தில் தினசரி என்ற அளவில் பயன்படுத்தி வந்தால், வறட்சித் தன்மை, மங்குதல், கரும்புள்ளிகள் போன்ற பிரச்சினைகள் தீர்வுக்கு வரும்.
 
மேலும் தலைமுடியில் தேங்காய் எண்ணெய் தேய்த்து ஒருநாள் விட்டு ஒருநாள் என்ற அளவில் தேய்த்துக் குளித்தால் தலைமுடி உதிர்தல், நுனிமுடி வெடித்தல், பொடுகுத் தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு இது சிறந்த தீர்வாக இருக்கும்.
 
தேங்காயில் சமைத்த உணவுகளை உண்ணும்போது நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்படும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தியானது மேம்படுகின்றது. 
 
மேலும் தேங்காய்ப் பால் அல்சர் என்னும் குடல் புண் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகவும் உள்ளது. மேலும் குழந்தைகளின் உடல் எடையினை அதிகரிக்க நினைத்தால் தேங்காய்ப் பால் கலந்த உணவினைக் கொடுத்து வருதல் வேண்டும்.

Leave a Comment