வெள்ளரிப் பழத்தின் நன்மைகள் இவைகள்தான்!!

By Staff

Published:

45624a260c6cf152ff075f71611e11cd-3

வெள்ளரிக்காயின் நன்மைகள் நாம் அனைவரும் அறிந்ததே, இப்போது நாம் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் சாப்பிட ஏற்ற வெள்ளரிப் பழத்தின் நன்மைகள் குறித்துப் பார்க்கலாம்.

வெள்ளரிப் பழம் இனிப்பு சுவை இல்லாத ஒரு பழ வகை என்பதால் இதனை நீரழிவு நோயாளிகளும் தயங்காமல் சாப்பிடலாம். நாட்டுச் சர்க்கரையுடன் வைத்துச் சாப்பிட்டால் மிகச் சுவையாக இருக்கும்.

மேலும் இது நெஞ்செரிச்சல், வயிற்று எரிச்சல், அல்சர், குடல் புண், தொண்டைப் புண் போன்ற பிரச்சினைகளுகு அருமருந்தாக உள்ளது.

மேலும் வயிற்றுப் போக்கினால் ஏற்படும் நீர் இழப்பினை சரிசெய்யும் தன்மை கொண்டது, மேலும் இது பசியின்மை பிரச்சினையை சரிசெய்வதோடு, ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்கின்றது.

உடல் சூடு பிரச்சினை உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டிய பழ வகையாகும். மேலும் உடல் எடையினைக் குறைக்க டயட் இருப்போர் கட்டாயம் வெள்ளரிப் பழத்தினை எடுத்துக் கொண்டால் கெட்ட நீர் அனைத்தையும் வெளியேற்றிவிடும்.

வெயில் காலங்களில் சாப்பிட்டு வந்தால் கோடை கால நோய்களில் இருந்து எளிதில் தப்பித்துவிடலாம்.
 

Leave a Comment