மூளையை பாதிக்கும் கெட்ட உணவுகளின் பட்டியல் இதுதான்… இதை சாப்பிடுவதை உடனே நிறுத்துங்க…

இன்றைய காலகட்டத்தில் எல்லா உணவுப் பொருட்களிலும் கலப்படம் இருக்கிறது என்று கூறுகிறார்கள். அதற்கு அதிகப்படியாக தற்போது பாஸ்ட் புட் மோகம் என்பது மக்களிடையே பிரபலமாக இருக்கிறது. திரும்பும் இடமெல்லாம் பாஸ்ட் புட் கடைகள் தான்…

fast food

இன்றைய காலகட்டத்தில் எல்லா உணவுப் பொருட்களிலும் கலப்படம் இருக்கிறது என்று கூறுகிறார்கள். அதற்கு அதிகப்படியாக தற்போது பாஸ்ட் புட் மோகம் என்பது மக்களிடையே பிரபலமாக இருக்கிறது. திரும்பும் இடமெல்லாம் பாஸ்ட் புட் கடைகள் தான் ஆக்கிரமித்து கொண்டிருக்கிறது. இந்த உணவுகள் எல்லாம் உடம்புக்கு கெடுதல் என்று தெரிந்தாலும் கூட நாவின் ருசிக்கு அடிமையாகி பலர் சாப்பிட்டு கொண்டு தான் இருக்கிறார்கள்.

இந்த ஃபாஸ்ட் புட்களை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது அது மெல்ல மெல்ல நம் உடல் உறுப்புகளை பாதிக்கிறது. இந்த வகையில் நம் மூளையை பாதிப்படைய செய்து நினைவாற்றலை இழக்க செய்யும் மிகவும் ஆபத்தான கெட்ட உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அதை சாப்பிட்டுக் கொண்டிருந்தால் உடனே நிறுத்தி விடுங்கள்.

முதலில் சர்க்கரை சேர்த்த பானங்கள் மற்றும் உணவுகள். இவை அதிகப்படியாக உடலை கெடுக்கிறது. அடுத்ததாக இன்ஸ்டன்ட் நூடுல்ஸ். இது இன்சுலினை அதிகரிக்க செய்து மூளையின் செயல்பாட்டை இந்த இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் பாதிப்படைய செய்கிறது.

அடுத்ததாக பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள். இந்த பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து அறிவாற்றலை இழக்க செய்கிறது. அடுத்து அதிகப்படியாக எண்ணெயில் பொரித்த வறுத்த உணவுகள். இவை மூளையின் ரத்த ஓட்டத்தை மெதுவாக்குகிறது.

மேலும் மது அருந்துதல் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடியது. இது தவிர பாஸ்ட் புட் கடைகளில் உபயோகப்படுத்தப்படும் அஜினமோட்டோ சுவையூட்டிகள் போன்றவை மூளையை கடுமையாக பாதிக்கும். இவற்றை அறிந்து கொண்டு உடல் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் செயல்பட்டால் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ முடியும்.