‘மிக, மிக அரிது’ … இந்த மூணு வகை பிளட் குரூப் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காதாம்!

By Amaravathi

Published:

பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், ரத்த தானம் செய்யும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தது சோசியல் மீடியாவில் வைரலானது. அரிய வகை இரத்த வகையைச் சேர்ந்த நடிகரான ஹிருத்திக் ரோஷன், தனது பி-நெகட்டிவ் வகை ரத்தத்தை தானமாக வழங்கினார். மேலும் தனது ரசிகர்களும் ரத்த தானம் செய்து உயிர்களை காக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். பி நெகட்டிவ் மட்டுமல்லாது ஏபி நெகட்டிவ், ஏபி பாசிட்டிவ் வகை ரத்தங்களும் மிகவும் அரிதானது என்பது குறிப்பிடத்தக்கது.

1. AB நெகட்டிவ்:

AB நெகட்டிவ் என்பது ABO இரத்தக் குழுவில் உள்ள அரிதான இரத்தமாகும். மொத்த மக்கள் தொகையில் 1 சதவிகிதம் பேருக்கு மட்டுமே இந்த ரத்த வகை உள்ளது. அதாவது 100 பேரில் ஒருவர் மட்டுமே AB நெகட்டிவ் ரத்தவகையை சேர்ந்தவராக இருப்பார்கள். ஒரு ஏபி நெகட்டிவ் நோயாளி மற்றொரு ஏபி நெகட்டிவ் மற்றும் ஏபி பாசிட்டிவ் ரத்த வகையைச் சார்ந்தவர்களுக்கு ரத்த தானம் செய்யலாம். அதேபோல் அவர்கள் ஏபி நெகட்டிவ், ஓ நெகட்டிவ், ஏ நெகட்டிவ் மற்றும் பி நெகட்டிவ் நன்கொடையாளர்களிடமிருந்து மட்டுமே இரத்தத்தை தானமாக பெற முடியும். AB நெகட்டிவ் இரத்தில் உள்ள பிளாஸ்மா அனைத்து ரத்த வகையைச் சேர்ந்த நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க ஏற்றது என்பதால், இந்த வகை ரத்தமானது அரிதானதாகவும் முக்கியமானதாகவும் கருதப்படுகிறது.

2. AB பாசிட்டிவ்:

மக்கள் தொகையில் 2 சதவீதம் பேர் மட்டுமே AB பாசிட்டிவ் வகையை சார்ந்தவர்களாக இருப்பார்கள். அதாவது 50 பேரில் ஒருவருக்கு மட்டுமே ஏபி பாசிட்டிவ் இரத்த வகை இருக்க வாய்ப்புள்ளது. இந்த ரத்த வகையைச் சேர்ந்தவர்கள் AB பாசிட்டிவ் நோயாளிக்கு மட்டுமே இரத்த தானம் செய்ய முடியும், ஆனால் எந்தவொரு இரத்த வகையிலிருந்தும் சிவப்பு இரத்த அணுக்களை பாதுகாப்பாகப் பெற முடியும், இதனால் அவர்களை “உலகளாவிய பெறுநராக” மாற்ற முடியும்.

AB பாசிட்டிவ் இரத்தமானது சிவப்பு இரத்த அணுக்களின் மேற்பரப்பில் A மற்றும் B ஆன்டிஜென்களைக் கொண்டுள்ளது மற்றும் பிளாஸ்மாவில் எதுவும் இல்லை. இதுசே AB பாசிட்டிவ் ரத்தம் கொண்டவர்களை உலகளாவிய பிளாஸ்மா நன்கொடையாளர் ஆக்குகிறது. அதாவது AB பாசிட்டிவ் நோயாளிகளின் பிளாஸ்மா வேறு எந்த ABO இரத்த வகையும் உள்ள நோயாளிகளுக்கு மாற்ற ஏதுவானது.

3. B நெகட்டிவ்:

பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் ரத்தம் பி நெகட்டிவ் வகையைச் சார்ந்தது. மொத்த மக்கள் தொகையில் சுமார் 2 சதவீதம் பேர் இந்த வகை ரத்த வகையை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. பி நெகட்டிவ் குரூப் ரத்தமுள்ள நபர்கள், AB பாசிட்டிவ், பி பாசிட்டிவ், பி நெகட்டிவ் மற்றும் ஏபி நெகட்டிவ் ஆகிய குரூப் ரத்த வகையைச் சார்ந்த நபர்களுக்கு ரத்த தானம் செய்யலாம். பி நெகட்டிவ் மற்றும் ஓ நெகட்டிவ் நோயாளிகளிடமிருந்து பெறப்படும் ரத்தத்தை தங்களது உடலுக்குள் செலுத்திக்கொள்ளவும் முடியும்.

Leave a Comment