சுட்டெரிக்கும் வெயிலில் உங்களை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள இந்த ஜூஸ்களை குடிங்க… அப்புறம் கூல் ஆகிடுவீங்க…

வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. சுட்டெரிக்கும் வெயிலால் சூடு தாங்காமல் அனைவரும் ஏசி ரூமுக்கு உள்ளையே முடங்கி இருக்கிறார்கள். ஆனால் இயற்கை பானங்களின் மூலம் இந்த சுட்டெரிக்கும் வெயிலில் உங்களால் புத்துணர்ச்சியாக உணர முடியும்.…

juice

வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. சுட்டெரிக்கும் வெயிலால் சூடு தாங்காமல் அனைவரும் ஏசி ரூமுக்கு உள்ளையே முடங்கி இருக்கிறார்கள். ஆனால் இயற்கை பானங்களின் மூலம் இந்த சுட்டெரிக்கும் வெயிலில் உங்களால் புத்துணர்ச்சியாக உணர முடியும். அப்படிப்பட்ட ஜூஸ்களை பற்றி இனி காண்போம். இதை அன்றாடம் நீங்கள் குடித்து வரும்போது இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்து புத்துணர்ச்சியாக உணர்வீர்கள்.

முதலாவதாக இளநீர். இளநீர் உடனடியாக உடலுக்கு ஆற்றல் தரக்கூடியது. இது குடிக்கும் போது உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும். அடுத்ததாக நெல்லிக்காய் ஜூஸ். இந்த ஜூஸில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் ஆரோக்கியம் மேம்படும்.

அடுத்ததாக ஆரஞ்சு ஜூஸ. இந்த ஜூஸில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நீர்ச்சத்து குறையாமல் தடுக்கும். அடுத்து தர்பூசணி ஜூஸ். இந்த ஜூஸில் எலக்ட்ரோலைட்டுகளும் நார்சத்துக்களும் அதிகம். கோடையில் உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் இந்த தர்பூசணி ஜூஸை குடித்து வரும்போது வயிற்றுப் பிரச்சனைகள் சரியாகும்.

மாம்பழ ஜூஸ் மற்றும் அண்ணாச்சி பழ ஜூஸ். இந்த ஜூஸ்களில் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை இருப்பதால் உடல் வெப்பத்தை குறைத்து நீரேற்றமாக வைத்திருக்கிறது. இந்த வகை ஜூஸ்களை இந்த கோடைகாலத்தில் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். அப்போது இந்த சூடு உங்களை தாக்காமல் எப்போதும் புத்துணர்ச்சியாக குளுகுளுவென்று இருக்கலாம்.