நீங்க வாங்குற ஸ்வீட்ஸ்-ல இந்த மாதிரி பேப்பர் இருக்கா? உஷார்..!

நாம் ஸ்வீட் கடைகளில் வாங்கும் ஸ்வீட்ஸ்களில் பெரும்பாலும் பால் இனிப்புகளில் வெள்ளி பேப்பர் போன்று சுற்றப்பட்டிருக்கும். அல்லது அதன்மேல் ஒட்டப்பட்டிருக்கும். பார்ப்பதற்கு கண்ணைக் கவரும் இந்த வெள்ளி பேப்பரில் தான் பயங்கரம் ஒளிந்திருக்கிறது. நாம்…

Silver Foil Sweets

நாம் ஸ்வீட் கடைகளில் வாங்கும் ஸ்வீட்ஸ்களில் பெரும்பாலும் பால் இனிப்புகளில் வெள்ளி பேப்பர் போன்று சுற்றப்பட்டிருக்கும். அல்லது அதன்மேல் ஒட்டப்பட்டிருக்கும். பார்ப்பதற்கு கண்ணைக் கவரும் இந்த வெள்ளி பேப்பரில் தான் பயங்கரம் ஒளிந்திருக்கிறது. நாம் அழகுக்காகவும், ஸ்வீட்ஸ் ஒட்டாமல் வருவதற்காகவும் சுற்றப்பட்டிருக்கும் இந்த வெள்ளி பேப்பர் சுற்றும் வழக்கம் எங்கிருந்து வந்தது தெரியுமா?

இனிப்புகளின் மேல் சுற்றப்படும் இந்த வெள்ளி இழைகள் மிகவும் மென்மையானவை. இதனை இந்தியில் வராக்கா என்று அழைப்பார்கள். வட இந்திய இனிப்புகளில் பெரும்பாலும் ஆண்டுதோறும் சுமார் 275000 கிலோ வெள்ளி இதற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த வெள்ளி மெல்லிய இழைகளாக மாற்றப்பட்டு பிரியாணி, பீடா, இனிப்புகள் உள்ளிட்டவற்றில் சுற்றப்படுகிறது.

இந்த வெள்ளி இழையானது இதற்கென உருவாக்கப்பட்ட இயந்திரத்தினால் மெல்லிய பேப்பராக மாற்றப்படுகிறது. அதவாது இதன் தடிமன் 0.025 மி.மீ. இருக்கும் வரை மெல்லிதாக்கப்படுகிறது. இது நம் தோலைக் காட்டிலும் பல மடங்கு தடிமன் குறைவு. இதனை உருவாக்க ஜெர்மன் பட்டர் பேப்பர் பயன்படுத்தப்படுகிறது.

அலற வைக்கும் சீனா…! மீண்டும் ஒரு பெருந்தொற்று அறிகுறியா..? மருத்துவமனையில் குவியும் கூட்டம்

ஹைதராபாத்தில் பெருமளவில் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு அலுமினியம், வெள்ளி இழைகள் ஒட்டப்பட்டிருப்பது தடைசெய்யப்பட்டிருந்தாலும், இந்த பேப்பர் ஒட்டப்பட்டிருக்கும் உணவுகளை நாம் உண்ணும் போது இரத்ததில் கால்சியம் அளவு அதிகரித்து அல்சைமர் நோயில் கொண்டு போய் விடும். மேலும் அதிகமான வெள்ளி சேரும் போது உடல் நிறத்தையே மாற்றி விடும்.

இப்படி உடலுக்கு அதிக தீங்கிழைக்கும் இதுபோன்ற பேப்பர்கள் சுற்றப்பட்டிருக்கும் இனிப்புகளை வாங்குவதைத் தவிர்த்து நல்ல தரமான எண்ணெயில் தயார் செய்யப்பட்ட இனிப்புகளை வாங்கி உண்ணும் போது சர்க்கரை நோய், உடல் பருமன் உள்ளிட்ட பெரும்பாலான வியாதிகள் தடுக்கப்படுகிறது.