முகத்துக்கு தக்காளி தேய்த்து கழுவினால் முகம் நல்ல பளிச்சுன்னு இருக்கும். ஆனா, அந்த தக்காளியை பச்சையா சாப்பிட்டு வந்தாலோ இல்ல ஜூசெடுத்து குடித்து வந்தால் உடல் மினுமினுப்பு கூடுவதோடு, தினமும் தக்காளி ஜூஸ் குடித்து வந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். இனி தக்காளி ஜூஸ் செய்வது எப்படின்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
தக்காளி
தண்ணீர்
தேன் – தேவைக்கு
லெமன் – தேவைக்கு.
கொத்தமல்லி – சிறிதளவு.
உப்பு – 1 சிட்டிகை.
செய்முறை :
தக்காளியை நன்றாக கழுவி துண்டுகளாக நறுக்கி, தக்காளியை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். அதனுடன் தேவைக்கேற்ப ஐஸ் தண்ணீர், தேன், லெமன், உப்பு போட்டுக் கலந்து கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.