கம்பில் உள்ள சத்துகள் இவைகள்தான்!!

சிறு தானிய வகைகளில் ஒன்றான கம்பு அதிக அளவில் சத்துகளைக் கொண்டதாக உள்ளது, இந்தக் கம்பானது உடல் சூட்டினைத் தணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் கம்பு இரும்புச்சத்தினை அதிகமாகக் கொண்டதாக உள்ளது. மேலும்…

819e8ecbaa9ab312e4a850a28fb2c1da

சிறு தானிய வகைகளில் ஒன்றான கம்பு அதிக அளவில் சத்துகளைக் கொண்டதாக உள்ளது, இந்தக் கம்பானது உடல் சூட்டினைத் தணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் கம்பு இரும்புச்சத்தினை அதிகமாகக் கொண்டதாக உள்ளது.

மேலும் இது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கையினை அதிகரித்து, இரத்த சோகை போன்ற பிரச்சினைகளைச்  சரிசெய்கின்றது.

கம்பு அதிக அளவில் நார்ச் சத்தினைக் கொண்டதாக இருப்பதால், உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்து உடல் எடையினைம் குறைக்க உதவுகின்றது. மேலும் கம்பு, இரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும் தன்மை கொண்டும் உள்ளது.

மேலும் கம்பு செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளான பசியின்மை, வயிற்றுப் பொருமல் போன்றவற்றினைச் சரி செய்வதாக உள்ளது.

மேலும் கம்பில் சாதம் செய்து சாப்பிடுவதைவிட கூழ் செய்து சாப்பிடுவது சிறப்பான பலனைத் தரும், இதனை மிக முக்கியமாக வெயில் காலங்களில் குடிப்பது நல்லது.

மேலும் கம்பு மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய் என பல வகையான புற்றுநோய்க் கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பினை கொடுக்கிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கம்பினை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படக் காரணம் கம்பு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பதால்தான் ஆகும்.

மேலும் கம்பு பல் மற்றும் எலும்புகளை உறுதியாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன