வெள்ளைப் பூசணியில் அதிக அளவு நீர்ச்சத்து இருப்பதால் உடல் சூடு, வயிற்றுக் கடுப்பு போன்ற பிரச்சினை இருப்பவர்கள் எடுத்துக் கொண்டால் பிரச்சினைகள் சரியாகும்.
மேலும் பூசணிக்காய் அதிக அளவு நார்ச்சத்தினைக் கொண்டதாக இருப்பதால் உடல் எடையைக் குறைக்க நினைப்போர் டயட் உணவாக எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். இது கெட்ட நீரை வெளியேற்றுவது மட்டுமல்லாமல் கெட்ட கொழுப்பினையும் கரைக்கின்றது.
பூசணிக்காயில் பொதுவாக குழம்பு, கூட்டு, பொரியல், ஜூஸ் என பல ரெசிப்பிகள் செய்வர். அதனால் ஏதோ ஒரு வகையில் பூசணிக்காயினை எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், குறைவாக சிறுநீர் போதல், சிறுநீரகத்தில் கல் போன்ற பிரச்சினைகளுக்கு வெள்ளைப் பூசணி பெரும் தீர்வாக உள்ளது.
மேலும் குடல் புண், வயிற்றுப் புண் போன்ற பிரச்சினை இருப்பவர்கள் பூசணிக்காய் ஜூஸினை பருகி வந்தால் பிரச்சினைகள் சரியாகும். மேலும் நெஞ்செரிச்சல், வயிற்று எரிச்சல் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் பூசணிக்காய் கூட்டு செய்து சாப்பிடுதல் வேண்டும்.
பூசணிக்காய் இரத்தத்தை சுத்திகரிப்பதோடு, இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாகவும் உள்ளது. வெள்ளை பூசணிக்காய் வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால் கண் பார்வைத் திறனை குறைபாடு இருப்பவர்கள் சாப்பிட வேண்டும்.