ஆண்களே இத்தனை வயசுக்குள்ள கல்யாணம் பண்ணிட்டா ரொம்ப நல்லது..! அதிர்ச்சி கொடுக்கும் ரிப்போர்ட்

By John A

Published:

இந்தியாவில் ஆண்களுக்குத் திருமண வயது 21-ம், பெண்களுக்குத் திருமண வயது 18-ம் என சட்டம் சொல்கிறது. ஆனால் பெரும்பாலும் இன்றைய தலைமுறையினரில் ஆண்கள் 25 வயதுக்கு மேலும் பெண்கள் 21 வயதுக்கு மேலும் திருமணம் செய்கின்றனர். இன்னும் வளர்ச்சி அடையாத சில இடங்களில் சமுதாய கலாச்சாரங்களில் பிண்ணிப் பிணைந்தவர்கள் மற்றும் கல்வி அறிவு இன்னும் முழுமையாக எட்டாதவர்கள் பெண் குழந்தைகளை பூப்படைந்தவுடன் அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். இதனால் மன அளவிலும், உடல் அளவிலும் முதிர்ச்சி அடையாமல் பருவவயது முடியும் முன்னரே குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றனர். இதனால் பெண்களின் முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது.

அதேபோல் ஆண்களும் திருமண வயதைத் தாண்டி குடும்ப சிக்கல்கள், நிதி நிலைமை, நிரந்தர வேலையின்மை, போதிய வருமானமின்மை போன்ற காரணங்களால் திருமணத்தினைத் தள்ளிப் போடுகின்றனர். இதனால் 30 வயதினைக் கடந்தும் ஏராளமோனோர் திருமணம் ஆகாமல் இருக்கின்றனர். இந்நிலையில் மருத்துவ இதழ் ஒன்று ஆண்களின் திருமண வயதுக்கும், குழந்தைப் பிறப்புக்கும் இடைய ஆய்வு ஒன்றை நடத்தியது.

ரஜினியின் கேரியரை உச்சத்தில் நிறுத்திய கமலின் இரண்டு சூப்பர் டிப்ஸ்.. பெயர் வாங்கிக் கொடுத்த அந்த இரண்டு படங்கள்

அந்த ஆய்வு முடிவானது அதிர்ச்சி தரும் வகையில் தந்தை வயதானவராக இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு நரம்பியல் நோய்கள் தாக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும் அந்த முடிவில் 40 வயதினையொட்டி திருமணம் செய்யும் போது பிறக்கும் குழந்தைக்கு ஆரோக்கியக் குறைபாடு, இருதயக் கோளாறுகள் வர சாத்தியம் உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சரியான வயதில் திருமணம் சொந்தத்தில் திருமணம் முடித்தவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் மன நலக் குறைபாடு, இரத்தம் உறைதல் திறன் குறைவு, மூளை வளர்ச்சியின்மை போன்ற நோய்களுக்கு ஆளாகி வருவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இதனால் தான் இரத்த உறவுள்ள சொந்தங்களுக்குள் திருமணம் முடிக்க வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தற்போது ஆண்கள் வயது முதிர்ந்து திருமணம் முடித்தாலும் அவர்களின் விந்தணுவின் டிஎன்ஏ பாதிப்படைந்து அதன் தரம் மோசமாகிறது. எனவே 25-30 வயதிற்குள் விந்தணுக்கள் மிகச் சுறுசுறுப்பாக இருக்கும் போதே திருமணம் செய்வது கொள்வது தான் பிறக்கும் குழந்தைக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கும் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.