காலையில் எழுந்தவுடன் இரண்டு முதல் நான்கு கிளாஸ் வரை தண்ணீர் குடிக்கனும். எந்த வேலை எப்படி இருந்தாலும் ஒரு மணிக்கொருமுறை கொஞ்சம் நீர் குடிப்பதை வழக்கமா வைத்துக்கொள்ளுங்கள். இதனால் வியர்வைமூலம் வெளியேறும் நீரின் இழப்பை சமப்படுத்தப்படும்.
சோற்றுக் கற்றாழையை கீறி உள்ளிருக்கும் சதைப்பகுதியை உடலில் தடவி தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளியுங்கள். உடம்பு ஏசி போட்டதுபோல இருக்கும்.
பாட்டிலில் அடைக்கப்பட்டிருக்கும் குளிர்பானத்தை குடிக்காமல் இளநீர், நீர்மோர், ப்ரெஷ் ஜூஸ் எனப்படும் பழச்சாறுகள், கரும்புச்சாறு, கூழ் குடியுங்கள். தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு என பழங்களையும், சாப்பிடுங்கள்.வெள்ளரி, கோஸ், பூசணி, வாழைத்தண்டு, கேரட், புதினா, கொத்தமல்லி, எலுமிச்சை இவைகளையும் ஜூஸ் செய்து சாப்பிடுங்கள்.
தக்காளியும், மாதுளையும், நெல்லியும் கோடைக்காலத்திற்கு கண்கண்ட நிவாரணம் என்பதால் இதனை தினமும் அடிக்கடி சாப்பிடலாம்.
*மிளகு, இஞ்சி சேர்த்துக் கொள்ளுங்கள். எண்ணெய், காரம் குறிப்பாக ஊறுகாய், வத்தல் இவை கோடை காலத்தில் தவிர்க்கப்பட வேண்டியவை.
*நிறைய நீர், மோர் குடியுங்கள். ஐஸ் கட்டி, மிகவும் குளிர்ந்த ஐஸ்கிரீம் இவைலாம் அவசியம் தவிர்க்கப்பட வேண்டியவைகல். மொத்தமா சாப்பிடாம கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடலாம். பாஸ்ட் புட் உணவுகளை தவிர்க்கலாம். அதிக நீர் சத்து உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். வறண்ட வாய், கண், வறண்ட சருமம், படபடப்பு இவை நீர் வற்றுவதன் அறிகுறியாகும். அத்தகைய நேரங்களில் எலக்ட்ரால் கலந்த தண்ணீர் குடியுங்கள். இல்லையெனில் நிறைய தண்ணீர் குடியுங்கள்.
கோடையில் உற்பத்தியாகும் அதிக கிருமிகள் வாய் வழியே உள்ளே செல்லும் வாய்ப்பு அதிகம். எனவே தினமும் அடிக்கடி நன்கு வாய் கொப்பளியுங்கள்.
கொளுத்தும் வெய்யிலில் வெளியில் சென்று வந்ததும் தவிப்பாய் இருக்கின்றதா? பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானத்தை எடுத்துக்கொள்ளாமல் ஒரு க்ரீன் டீயோ அல்லது 2 ஸ்பூன் வெங்காய ஜூஸோ எடுத்துக் கொள்ளுங்கள். சூரிய கதிரால் ஏற்பட்ட திசுக்கள் பாதிப்பினை இது உடனடியாக சரி செய்து விடும்.
வெங்காயம் குறிப்பாக சிறிய வெங்காயம் சூட்டினை குறைப்பதில் வல்லது என நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் நீர் ஊற்றிய முதல் நாள் சாதமும், வெங்காயமும் உடலுக்கு சிறந்த உணவாக நிரூபணமாகி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது நம் முன்னோர் கண்டுபிடித்த பெருமைக்குரிய உணவு வகையாகும். இன்னும் 3 மாதங்களுக்கு வெயில் போகும்வரை இந்த நீராகார உணவை சாப்பிடுவது மிகவும் நல்லது.
சாலட் எனப்படும் பச்சை காய்கறி கலவையை சின்ன வெங்காயம் சேர்த்து தினமும் இரு முறை எடுத்துக் கொள்ளுங்கள்.
வெளியில் செல்லும் முன் ஒரு கிளாஸ் நீர் அருந்தி செல்வதை வழக்கமா வச்சுக்கனும்.
கோடைக்கால டிப்ஸ் தொடரும்….