நம் வாழ்நாளில் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஒரு சில முறையான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். நம் முன்னோர்கள் ஒரு முறையான வாழ்க்கை முறையை பின்பற்றியதால் தான் எந்த ஒரு நோய் பாதிப்பும் இன்றி நீண்ட ஆயுளோடு வாழ்ந்து இருக்கிறார்கள். வாரம் ஒரு முறை என்னை தேய்த்து குளிப்பது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற மருந்துகள் சாப்பிடுவது போன்றவற்றை தவறாமல் செய்து கொண்டிருந்தார்கள்.
ஆனால் இன்றைய பரபரப்பான சூழலில் எதையுமே நாம் பின்பற்றுவதே இல்லை. அதன் விளைவு பலவித நோய்கள் நம்மை தாக்குகிறது. அப்படி வாரத்திற்கு ஒருமுறை எண்ணைக்குளியல் எடுத்துக் கொள்ளும்போது நம் உடம்பிற்கு பலவித நன்மைகள் கிடைக்கிறது. அது என்ன என்பதை பற்றி இனி காண்போம்.
பொதுவாக வேலை நிமித்தமாக வெவ்வேறு இடங்களுக்கு செல்பவர்கள் ஸ்ட்ரஸில் இருப்பவர்களுக்கு இந்த எண்ணெய் குளியல் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் எண்ணெய் குளியல் நம் உடல் சூட்டை தணிக்கிறது. வறண்ட சருமம் உள்ளவர்கள் எண்ணெய் குளியல் எடுத்துக் கொள்வதன் மூலம் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளித்து மென்மையாக்குகிறது.
எண்ணெய் குளியலை வாரத்திற்கு ஒரு முறை தவறாமல் எடுத்துக்கொண்டு வரும்போது உடலை தளர்வடையச் செய்து மன அழுத்தத்தை குறைக்கிறது. நம் உடம்புக்குள் இருக்கும் எலும்பு வரை எண்ணெய் ஊடுருவும் தன்மை கொண்டிருப்பதால் மூட்டு எலும்பு தேய்மானம் போன்றவை தவிர்க்கப்பட்டு எலும்புக்கு பலம் கொடுக்கிறது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.
எண்ணெய் குளியலுக்கு நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் விளக்கெண்ணெய் போன்ற எண்ணெய்களை எடுத்து தேய்த்து விட்டு வெயிலில் சிறிது நேரம் நின்று விட்டு குளிக்கும்போது நமக்கு வைட்டமின் டி கிடைக்கிறது. ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமையும் பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையும் எண்ணெய் குளியல் செய்வது மிக சிறப்பு. இத்தகைய நன்மைகளை கொண்ட எண்ணெய் குளியலை வாரத்திற்கு ஒருமுறை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்.