இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள். அதற்கு காரணம் ஃபாஸ்ட் ஃபுட் மோகம்தான். ஆரம்பத்தில் உடல் நலனில் அக்கறை இல்லாமல் என்னவெல்லாமோ சாப்பிட்டுவிட்டு பிறகு அவதிப்படுகிறார்கள். உடல் எடையை குறைக்க வேண்டும் என்று டயட் ஜிம் என தேடி ஓடுகிறார்கள். அப்படி உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உங்களுக்கு இந்த 30-30-30 பார்முலா மிகவும் உபயோகமாக இருக்கும். அது என்ன என்பதை பற்றி இனி காண்போம்.
30-30-30 பார்முலா என்பது மூன்று விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டியது ஆகும். காலையில் எழுந்த 30 நிமிடங்களுக்குள் 30 கிராம் புரோட்டீனை நீங்கள் சாப்பிட வேண்டும். பின்னர் 30 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதுதான் இந்த 30-30-30 பார்முலா ஆகும். இது உடல் எடையை குறைப்பதற்கு பெரிதும் உதவுகிறது என்று கூறுகிறார்கள்.
30-30-30 பார்முலாவை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது உங்கள் உடலில் மாற்றங்கள் ஏற்படுகிறது. பசியை கட்டுப்படுத்துகிறது. கலோரிகளை எரிப்பதற்கு உதவுகிறது. மேலும் உடலில் பல நன்மைகள் ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள். அதனால் உடல் பருமனை குறைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இந்த 30-30-30 பார்முலாவை பயன்படுத்தி பாருங்கள்.