கண்பார்வையை தெளிவாக்கும் பொன்னாங்கண்ணி கீரை சூப்

தினமும் ஒரு கீரையினை சாப்பாட்டில் சேர்த்துக்கொள்வது நல்லது. சாம்பார், கூட்டு, மசியல், போண்டா, சூப் என பல்வேறு விதமா கீரையினை சமைச்சு சாப்பிடலாம். ஒவ்வொரு கீரைக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. பொன்னாங்கண்ணி கீரையை சாப்பாட்டில்…

தினமும் ஒரு கீரையினை சாப்பாட்டில் சேர்த்துக்கொள்வது நல்லது. சாம்பார், கூட்டு, மசியல், போண்டா, சூப் என பல்வேறு விதமா கீரையினை சமைச்சு சாப்பிடலாம். ஒவ்வொரு கீரைக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. பொன்னாங்கண்ணி கீரையை சாப்பாட்டில் சேர்த்து வந்தால் கண்பார்வை தெளிவடையும், சருமம் பளப்பளப்பாகும்.

பொன்னாங்கண்ணி கீரை சூப்ப் செய்முறையை இனி பார்க்கலாம்.

1104b88594e5771fce96c3ad056df8e7

தேவையானவை:
பொன்னாங்கண்ணி கீரை (ஆய்ந்தது) – ஒரு கப்,

வல்லாரை (ஆய்ந்தது) – ஒரு கப்,

தனியா – ஒரு டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு,

இஞ்சி – ஒரு துண்டு,

மிளகு – அரை டீஸ்பூன்.

செய்முறை:
இஞ்சியைக் கழுவி, தோல்சீவி துருவிக் கொள்ளவும். மிளகை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும். இரண்டு கீரைகளையும் அலசி எடுத்துக்கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரில், துருவிய இஞ்சி, உப்பு, மிளகு ஆகியவற்றைப் போட்டு கொதிக்கவிடவும். கொதிக்கும்போது கீரைகளைப் போட்டுவிட்டு, அடுப்பை அணைத்துவிடவும். 2 நிமிடம் மூடிவைத்து விட்டால், கீரைகளின் சாறு கொதிநீரில் இறங்கிவிடும். வடிகட்டி, கொத்தமல்லி இலைகள் தூவி பரிமாறலாம்.

பயன்:
கண்கள் பிரகாசமாகவும், ‘பளிச்’சென்று கண்களை எடுத்துக் காட்டவும் இந்த சூப்பைப் பருகலாம். கூந்தல் வளர்ச்சிக்கும் இந்த சூப் உதவி செய்யும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன