கிர்ணி பழத்தில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி, பொட்டாசியம் அதிகமுண்டு உடலின் நீர்ச்சத்து இழக்கும்போது, கூடவே சோடியம், பொட்டாசியம் சத்துக்களையும் சேர்ந்தே இழக்கிறோம். அதை ஈடுகட்ட கிர்ணி பழ ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம். பசியின்மை, எடை குறைவு, மலச்சிக்கல், சிறுநீர் பாதைக் கோளாறு, அமிலத் தன்மை, அல்சர் ஆகிய அனைத்துக்கும் நல்லது. பசியின்மையை சரி செய்து, களைப்பை நீக்கி, வாதத்தையும் பித்தத்தையும் குறைக்கும்.
கோடைக்காலத்தில் ஏற்படும் அதிகமான உடல் சூட்டை இந்தப் பழம் தணிப்பதால் பயமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம்
இந்த கோடையை சமாளிக்க உடலுக்கு குளிர்ச்சியான இந்த கிர்ணி ஜூஸ் கைக்கொடுக்கும் . இதன் சுவையும் அருமை. உடலுக்கும் ஆரோக்கியம் . நீங்களும் செய்து பாருங்க …
தேவையான பொருட்கள் :
கிர்ணி பழம் – பாதி
சர்க்கரை – 2 (அ )3 ஸ்பூன்
ஐஸ் தண்ணீர் – கால் கப்
செய்முறை :
- முதலில் கிர்ணி பழத்தின் தோலை சீவிகொள்ளவும் .
- அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி , மிக்சியில் சர்க்கரை சேர்த்து நன்கு மைய அரைக்கவும் .
- அவ்வளவுதான் சுவையான கிர்ணி பழ ஜூஸ் தயார் .
- இதனை பரிமாறும்போது ஐஸ் துண்டுகள் சேர்த்தும் பரிமாறலாம் .
- இதனுடன் தேவைப்பட்டால் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு,தேன் கூட சேர்த்துக்கொள்ளலாம்