ஜீரணத்தை எளிதாக்கும் ஸ்பெஷல் சீரக மோர்

By Staff

Published:


0b709f52c7d8909f4e7127b7e345e013

விருந்தில் அதிகம் சாப்பிட்டு அவதிப்படும் நேரத்தில் அஜீரணக்கோளாறை சரிசெய்ய இந்த சீரக மோர் பயன்படும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாமா?!

தேவையான பொருட்கள் :

சீரகம் – 2 தேக்கரண்டி
தயிர் – 300 மி.லி.
ப.மிளகாய் – 1
கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி
பெருங்காயத்தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை :

சீரகத்தை வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

மிக்சி ஜாரில் தயிர், ப.மிளகாய், கொத்தமல்லி தழை, உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவைகளை போட்டு அதனுடன் 200 மி.லி. நீர் கலந்து ஒருமுறை நன்றாக ஒடவிடுங்கள். எல்லா பொருட்களும் நன்கு கலந்து விடும். இதில் மேலும் 1 கப் குளிர்ந்த நீர் கலந்து, அதனுடன் சீரகப்பொடியை கலந்து பருகுங்கள்.

விருந்துகளில் நிறைய சாப்பிட்டுவிட்டு அதற்கு மேல் ஐஸ்கிரீம் மற்றும் இனிப்பு வகைகளை சாப்பிடுகிறோம். அரை ஜீரணத்தை கடினமாக்கும். இந்த ஸ்பெஷல் மோர் பருகினால் ஜீரணம் எளிதாகும் . தயிராய் சாப்பிடுவதைவிட மோர் உடலுக்கு நல்லது. தயிரை பெருக்கி, நெய்யை உருக்கி… சேர்க்கனும்ன்னு நம்ம பெரியவங்க சொல்வாங்க.

Leave a Comment