இழந்த புத்துணர்ச்சியை உடனடியாக மீட்டுத்தரும் வாழைப்பழ மில்க்‌ஷேக்…

கோடைக்காலம் தொடங்கிவிட்டது. என்னதான் ஆரோக்கிய உணவுகளை எடுத்துக்கிட்டாலும், அடிக்கும் வெயிலுக்கு எனர்ஜியெல்லாம் சட்டென காணாமல் போய்விடும். உடனடியா இழந்த எனர்ஜியை மீட்டு, புத்துணர்ச்சியூட்ட வாழைப்பழ மில்க்‌ஷேக் உதவும். தேவையான பொருட்கள்1. சற்று கனிந்த வாழைப்பழங்கள்…

கோடைக்காலம் தொடங்கிவிட்டது. என்னதான் ஆரோக்கிய உணவுகளை எடுத்துக்கிட்டாலும், அடிக்கும் வெயிலுக்கு எனர்ஜியெல்லாம் சட்டென காணாமல் போய்விடும். உடனடியா இழந்த எனர்ஜியை மீட்டு, புத்துணர்ச்சியூட்ட வாழைப்பழ மில்க்‌ஷேக் உதவும்.

7119b0e9ee7f55a0332bb909cc14cdfc

தேவையான பொருட்கள்
1. சற்று கனிந்த வாழைப்பழங்கள் 2
2. பசும்பால் 200 ml
2. தேன் இரண்டு ஸ்பூன்
4. சர்க்கரை இரண்டு ஸ்பூன்
5. பாதாம் அல்லது முந்திரி 3 எண்ணிக்கை மற்றும் ஏலக்காய் 3 இரண்டையும் மிக்ஸி ஜாரில் நன்றாக பொடித்து வைத்துக்கொள்ளுங்கள்
6. முந்திரி அல்லது பாதாமை நீளமாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள் அலங்கரிப்பதற்கு

a18fd20c480fa7ad4bc39f682f05afe6

செய்முறை.
 200மி.லி பாலில் 100மி.லி பாலை மிக்சி ஜாரில் விட்டு அதற்குமேல் இரண்டு கனிந்த வாழைப் பழங்களை நறுக்கி போட்டு, அதனுடன் பாதாம் ஏலக்காய் பொடியை போட்டு அதற்குமேல் இரண்டு ஸ்பூன் தேன் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அரைத்து கொள்ளவும்.  பிறகு மீதமுள்ள பாலை ஊற்றி மேலும் அரைக்கவும். பால் பொங்கி வரும்போது தேவைப்பட்டால் அதனுடன் ஐஸ் க்யூப்களை போட்டுக்கொள்ளலாம். அரைத்து வைத்துள்ள கலவையை கிளாஸில் ஊற்றி நீள்வாக்கில் வெட்டி வைத்துள்ள முந்திரி பாதாமை வைத்து அலங்கரித்து குடிக்க உடனடியாக புத்துணர்ச்சி கிடைக்கும்.  வாழைப்பழம் சாப்பிடாத குழந்தைகளுக்கு  குடிக்க கொடுக்கலாம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன