இரும்பு சத்து குறைப்பாடா?! அப்ப இந்த ஜூஸ் குடிங்க!!

By Staff

Published:

419094d56ea9de0f46ea775f2a6049fc-1-2

மாதுளையில் ஏகப்பட்ட சத்துக்கள் இருக்கின்றது என்பது தெரியும். இந்த கோடையில் வெள்ளரி, சப்போட்டா, கிர்ணிப்பழம், மாதுளை.. என கோடையை சமாளிக்கவென இயற்கை நமக்கு கொடுத்திருக்கு. முள்ளை முள்ளால்தான் எடுக்கனும் என்ற வாக்குக்கு ஏற்ப இந்த கோடையை சமாளிக்க கோடையில் விளையும் பொருட்களை கொண்டே சாமாளிக்க முடியும். இந்த கோடையில் இந்த பழங்கள் விலையும் குறைச்சலாகவும் கிடைக்கின்றது. உடலுக்கு வலுவூட்டும் மாதுளை ஜூஸ் செய்வது எப்படி என பார்க்கலாமா?!

1a55bdcc85e650159b92b82444ca8115-1

தேவையான பொருட்கள்:

மாதுளம் பழம் – 1,

சர்க்கரை – 100 கிராம்,

பால் – ஒரு கப்.

செய்முறை: மாதுளம் பழத்தை தோல் உரித்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். சர்க்கரை, . பரிமாறுவதற்கு முன், காய்ச்சி ஆற வைத்த குளிர்ந்த பால், ஐஸ் க்யூப் சேர்த்துக் கலந்து பரிமாறவும். பால் விரும்பாதவர்கள் அதைச் சேர்க்காமலும் பருகலாம். சளி பிடிக்கும்ன்னு பயம் இருந்தால் துளி உப்பு, மிளகு தூள் சேர்த்து பரிமாறலாம்

குறிப்பு: இந்த ஜூஸில் இரும்புச் சத்து, விட்டமின் சத்து அதிகம். தயாரித்த உடனேயே சாப்பிடுவது சிறந்தது. பித்தத்தைக் குறைக்கும்.

Leave a Comment