குழந்தைகள் முதல் பெரியவர் வரை பாடாய் படுத்தும் அஜீரண கோளாறு… வீட்டு வைத்திய முறையில் உடனடியாக சரி செய்வது எப்படி….?

நம் முன்னோர்கள் காலகட்டத்தில் எப்போது எந்த உணவு சாப்பிட வேண்டும் என்ற கட்டுப்பாடோடு இருந்தார்கள். குளிர்ந்த காலத்திற்கு சாப்பிட வேண்டிய உணவுகள் கோடைகாலத்தில் சாப்பிட வேண்டிய உடலை குளிர்விக்கும் உணவுகள் என பிரித்து வைத்திருந்தார்கள்.…

digestion

நம் முன்னோர்கள் காலகட்டத்தில் எப்போது எந்த உணவு சாப்பிட வேண்டும் என்ற கட்டுப்பாடோடு இருந்தார்கள். குளிர்ந்த காலத்திற்கு சாப்பிட வேண்டிய உணவுகள் கோடைகாலத்தில் சாப்பிட வேண்டிய உடலை குளிர்விக்கும் உணவுகள் என பிரித்து வைத்திருந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் எப்போது எதை சாப்பிட வேண்டும் என்ற வரைமுறையே இல்லை. இரவு நேரத்தில் பிரியாணி பரோட்டா போன்ற எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர். இதன் காரணமாக அஜீரணக் கோளாறு ஏற்படுகிறது.

அஜீரண கோளாறு ஏற்பட்டால் வயிறு வலி மயக்கம் ஒருவித அசௌகரியம் ஏற்படும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த அஜீரண கோளாறு வந்துவிட்டால் பாடாய்படுத்தும். அப்படி உங்களுக்கு அஜீரண கோளாறு ஏற்படும் போது வீட்டு வைத்தியம் முறைப்படி உடனடியாக சரி செய்ய என்ன செய்யலாம் என்பதை பற்றி இனி காண்போம்.

உங்களுக்கு அஜீரண கோளாறு ஏற்பட்டு விட்டால் இஞ்சி சாறை எடுத்து பருக வேண்டும். சிறியவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் அந்த இஞ்சி சாறை தேனில் கலந்து லேசாக சூடு படுத்திக் கொடுக்கும் போது உடனடியாக அஜீரண கோளாறு சரியாகும்.

அஜீரண கோளாறு உங்களுக்கு ஏற்பட்டு விட்டால் வீட்டில் இருக்கும் சமையல் சோடாவை சிறிது வெந்நீரில் கலந்து குடிக்கலாம். அதுமட்டும் இல்லாமல் பெருங்காயத் தூளையும் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்கும் போது அஜீரண கோளாறு உடனடியாக சரியாகும்.

இது தவிர உங்களுக்கு அஜீரண கோளாறு ஏற்படும் போது எதுவுமே கையில் கிடைக்கவில்லை என்றாலும் சிறிது வெதுவெதுப்பான நீரை குடிக்கும்போது வயிற்றில் இருக்கும் தசைகள் தளர்ந்து செரிமானம் எளிதாக நடைபெறும். இது போன்றவைகளை செய்யும்போது அஜீரண கோளாறில் இருந்து எளிதாக விடுபடலாம்.