நமது உடலே முழுக்க முழுக்க திரவத்தால் தான் இயங்குகிறது. உடல் முழுக்க இரத்தம் ஓட்டம் சீராக இயங்க வேண்டும் என்றால் தண்ணீர் அவசியம். நிறைய தண்ணீர் குடிப்பதால் தான் உடலில் வளர்சிதை மாற்றம், கழிவுப் பொருட்கள் வெளியேற்றுவது என ஒவ்வொரு உறுப்பும் அதனதன் வேலையை சீராகச் செய்கிறது. உடலில் தண்ணீர் சத்து பற்றாக்குறை ஏற்படின் தோல் வறட்சியாகி வெடிக்கும், கிட்னி சரியாக வேலை செய்யாது, இதனால் சிறுநீர் கழிப்பதில் உபாதை உண்டாகும், உடலில் உள்ள சத்துக்கள் உறிஞ்சப்பட்டு உடல் மெலியும். இப்படி பல உபாதைகள் சரிவர தண்ணீர் குடிக்காததால் ஏற்படுகிறது.
தண்ணீர் எந்த உணவுடனும் குடிக்கலாம் என்றால் கண்டிப்பாகக் கூடாது. சில உணவுகளை எடுத்துக் கொண்ட பின் சிறிது நேரம் தண்ணீர் குடிக்கக் கூடாது. அப்படி எந்த உணவுகளுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பதைப் பார்ப்போமா?
தண்ணீர் எப்போதுமே தூயதாக இருக்க வேண்டியது முதல் அவசியம். மழைக்காலங்களில் தண்ணீரைக் காய்ச்சிப் பருகலாம். அதுவே சிறந்தது. வேர்க்கடலை சாப்பிட்டபின் தண்ணீர் குடிக்கக் கூடாதாம். ஏனெனில் இருமல், தொண்டைவலி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துமாம்.
இந்தப் பழக்கமெல்லாம் உங்ககிட்ட இருக்கா? கண்டிப்பா மூளை பிரச்சினை உறுதி
இனிப்புகள் சாப்பிட்டபின் தண்ணீர் குடிக்கக் கூடாது. ஏனெனில் அந்த இனிப்புகள் தண்ணீருடன் உடனே கலந்து உடலில் சர்க்கரை அளவினை அதிகரித்து டைப் 2 சர்க்கரை நோய்க்கு வழிவகுத்திடுமாம். அதேபோல் பழங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது. பழங்களில் சிட்ரிக் அமிலம் போன்ற சிலஅமிலங்கள் இருப்பதால் 45 நிமிடம் கழித்தே தண்ணீர் பருக வேண்டும்.
மேலும் நம்மில் பலர் ஐஸ்கிரீம், டீ, காபி போன்ற சூடான பானங்கள் அருந்திவிட்டு தண்ணீர் குடிப்பர். இது உடல் எடை, வாயு, அமிலத்தன்மை போன்ற உபாதைகளை ஏற்படுத்தும். அரைமணி நேரம் கழித்து தண்ணீர் பருகலாம்.
அதேபோல் நாளொன்றுக்கு ஆண்கள் சுமார் 3.7 லிட்டர் தண்ணீரும், பெண்கள் 2.7 தண்ணீரும் குடிப்பது அவசியம். அப்போது தான் உடல் இயக்கம் சீராக நடைபெறும்.