இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு Fast Foods தான் அதிகம் விரும்பும் உணவாக இருக்கிறது. திரும்பும் இடமெல்லாம் Fast Food கடைகள் தான் ஆக்கிரமித்து இருக்கிறது. இதன் விளைவு பெரும்பாலான மக்கள் உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள்.
இதெல்லாம் சாப்பிட்டுவிட்டு உடல் பருமன் ஆன பிறகு டயட் எக்சர்சைஸ் என்று உடலைக் குறிக்க பல விஷயங்களை மெனக்கெடுத்து செய்கிறார்கள். ஆனால் இன்று இருக்கும் பரபரப்பான சூழலில் வேலைக்கு செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் உடற்பயிற்சி செய்வதற்கு கூட பலருக்கு நேரம் இல்லாமல் இருக்கிறது.
உடற்பயிற்சி செய்யாமல் நம் உணவு பழக்க வழக்கங்களில் ஒரு சில மாற்றங்களை செய்யும்போது உடல் எடையை கணிசமாக குறைக்கலாம் என்று கூறப்படுகிறது. அப்படி உடற்பயிற்சி செய்யாமல் நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் தினமும் காலையில் இந்த விஷயங்களை கண்டிப்பாக கடைப்பிடித்தால் ஸ்லிம்மாக மாறலாம்.
அது என்னவென்றால் தினமும் காலையில் முதலில் வெதுவெதுப்பான நீர் குடிக்க வேண்டும் அல்லது சீரகத் தண்ணீர் சோம்பு நீர் கிரீன் டீ போன்றவற்றை பருகலாம். வெள்ளை சர்க்கரை சேர்த்த காபி டீ பருகுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். தினமும் காலையில் இவற்றை தொடர்ந்து செய்து வரும்போது உங்களது உடல் எடை குறைவதை நீங்கள் கண்கூடாக பார்க்க முடியும். முடிந்தவரை வெள்ளை சர்க்கரையை தவிர்த்தாலே உடல் எடையை குறைக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.