நம் முன்னோர்கள் காலத்தில் 100 வயதை தாண்டி ஆரோக்கியமாக வாழ்ந்த பல மனிதர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் 50 வயதை தாண்டுவதே பெரிய விஷயமாக இருக்கிறது. ஏனென்றால் அதிகப்படியான திடீர் மரணங்கள் எதிர்பாரா மரணங்கள் அதிகம் நடக்கிறது. அதனால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் நாம் இருக்கிறோம்.
பரபரப்பான வாழ்க்கை முறையினால் கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு ஓடிக் கொண்டிருக்கிறோமே தவிர நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையானது எது தேவையில்லாதது எது என்பதை அறியாமலேயே நாம் இருக்கிறோம். இதனால்தான் மாரடைப்பு போன்ற இளம் வயது மரணங்கள் நடைபெறுகிறது. அதனால் உங்களுக்கு 40 வயது ஆகிவிட்டாலே பின்வரும் விஷயங்களை நீங்கள் கவனிக்க தொடங்க வேண்டும். அப்படியானால் நாம் ஆரோக்கியமாக நீண்ட ஆயுளோடு வாழ முடியும்.
உங்களுக்கு 40 வயது ஆகிவிட்டால் எலும்புகள் பலவீனமாகும். பெண்கள் 40 வயதுக்கு பிறகு மெனோபாஸ் என்ற ஒரு கட்டத்தை நெருங்கும் போது அதிகப்படியாக எலும்பு தேய்மானத்தால் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் நீங்கள் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகப்படியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மீன், முட்டை, தானியங்கள் போன்றவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
40 வயது கடந்து விட்டால் சிறு சிறு உடற்பயிற்சிகளை கட்டாயம் அன்றாடம் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் நடைப்பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும். இது தசையை வலுப்படுத்துவதோடு எலும்புகளுக்கும் நன்மை பயக்கும். அடுத்ததாக புரதம் நிறைந்த உணவுகளை 40 வயதுக்கு பிறகு கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
40 வயதை கடந்து விட்டால் ஆண்கள் புகை பிடிப்பது மற்றும் மது அருந்தும் பழக்கங்களை கட்டுப்படுத்தி குறைக்க வேண்டும் இது நுரையீரலை வெகுவாக பாதிப்படைய செய்யும் மேலும் 40 வயதை கடந்த பிறகு ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க வேண்டும். அதிக எடை கொண்டிருந்தால் அதை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சிறுதானிய உணவு வகைகளை சாப்பிட ஆரம்பித்து உடல் நலனில் அக்கறை எடுத்து கொண்டால் நீண்ட ஆயுளோடு நிச்சயமாக ஆரோக்கியமாக வாழ முடியும்.