புரதத்திற்காக தினமும் சிக்கன் சாப்பிடும் நபரா நீங்கள்…? எச்சரிக்கை… இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க…

இன்றைய காலகட்டத்தில் பலர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதனால் டயட் ஃபாலோ பண்ண வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஒரு சிலர் டயட் ஃபாலோ செய்து உடல் எடையை குறைத்த பிறகு உடம்பை பிட்டாக…

chicken

இன்றைய காலகட்டத்தில் பலர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதனால் டயட் ஃபாலோ பண்ண வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஒரு சிலர் டயட் ஃபாலோ செய்து உடல் எடையை குறைத்த பிறகு உடம்பை பிட்டாக வைப்பதற்காக தொடர்ந்து டயட் உணவுகளை எடுத்துக் கொள்ளும் வழக்கத்தையும் கொண்டிருப்பார்கள். இப்படி உடல் எடையை சரியானதாக வைத்துக் கொள்ள அனைவரும் பரிந்துரைக்கக் கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் புரதம் எனப்படும் புரோட்டின் அதிகப்படியாக இருக்க வேண்டும் என்பதுதான்.

அன்றாடம் நம் உடலுக்கு தேவைப்படும் புரோட்டீனை சரிவர கொடுக்கக் கூடிய ஒரு உணவாக அனைவராலும் பார்க்கப்படுவது சிக்கன்தான். சிக்கனில் தான் அதிகப்படியான புரோட்டின் இருப்பதால் டயட் உணவுகளில் இதை சேர்த்து பெரும்பாலானோர் சாப்பிடுகிறார்கள். ஆனால் ஒரு பக்கம் இந்த பிராய்லர் கோழி என்பது உடலுக்கு கெடுதல் என்ற தகவல் பரவினாலும் இதை அன்றாடம் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படி உடலின் புரத தேவைக்காக நீங்கள் தினமும் சிக்கன் சாப்பிடும் நபராக இருந்தால் ஒரு சில விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அது என்னவென்று இனி காண்போம்.

உடல் எடை குறைப்புக்கு டயட் ஃபாலோ செய்பவர்கள் அன்றாடம் புரதத்திற்காக சிக்கனை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது அது சில எதிர்பாராத உடல் நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக ஒரு ஆய்வில் கண்டுபிடித்து இருக்கிறார்கள். தினமும் தவறாமல் சிக்கன் சாப்பிட்டு வந்தால் இரைப்பை குடல் புற்றுநோய் ஏற்பட்டு இறப்பு சீக்கிரமாக நிகழலாம் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

அதனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல தினமும் சிக்கனை எடுத்துக் கொள்வதை தவிர்த்து விடுங்கள். அதை தவிர பழங்கள் மற்றும் காய்கறிகளில் எதில் அதிக புரதம் இருக்கிறதோ அதை தேர்ந்தெடுத்து அவ்வப்போது சாப்பிட்டு உங்களது உணவு பழக்க வழக்கங்களை சரியாக வைத்துக் கொள்ளும்போது எந்த பிரச்சினையும் இல்லாமல் நீண்ட ஆயுளோடு வாழலாம்.