குளிர்காலத்தில் ஏற்படும் மூட்டு பிரச்சனைகள்… வராமல் தடுக்கும் வழிமுறைகள் என்ன…?

By Meena

Published:

குளிர்காலம் வந்து விட்டாலே பலவித உடல் உபாதைகள் ஏற்படும். காய்ச்சல் ஜலதோஷம் இருமல் போன்றவைகள் அனைவருக்கும் ஏற்படும். ஆனால் இதையும் தாண்டி ஒரு பிரச்சனை குளிர்காலத்தில் அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடியது மூட்டு சம்பந்தமான பிரச்சனைகள். இது எதனால் வருகிறது இதை வராமல் தடுப்பது எப்படி என்பதை பற்றி இனி காண்போம்.

குளிர்காலத்தில் பொதுவாக பலருக்கும் இந்த பிரச்சனைகள் இருக்கும். இதற்கு காரணம் குளிர்காலத்தில் நம் தசையும் தசைநார்களும் விரைப்பு தன்மையை பெறுவதால் அது எலும்பு பகுதிகளில் வீக்கம் கொடுத்து வலியை ஏற்படுத்தும். கை கால்களை நீட்டுவதில் சிரமம் இருப்பது போன்றவைகள் ஏற்படும்.

குளிர்காலத்தில் வெப்ப நிலை இல்லாததினாலும் சூரிய ஒளி சரியாக கிடைக்காமல் வைட்டமின் டி குறைபாட்டால் இது போன்ற பிரச்சினைகளும் ஏற்படலாம். ந்த பிரச்சனை வராமல் தடுப்பதற்கு முதலில் சுறுசுறுப்பாக இயக்க வேண்டும். பெரியவர்கள் அடிக்கடி இந்த பிரச்சனை சந்திப்பார்கள் என்றால் அவர்கள் ஹீட் பேட் வாங்கி வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.

வெதுவெதுப்பான நீரில் குளிப்பதன் மூலம் நாம் தசைநார்கள் தளர்ச்சி அடையும். அப்பொழுது இந்த குளிர்கால மூட்டு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் இந்த நேரத்தில் எலும்புகளுக்கு பலம் அளிக்கக்கூடிய கால்சியம் ஒமேகா 3 நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இது போன்ற வழிமுறைகளை பின்பற்றும்போது இந்த குளிர்கால மூட்டு பிரச்சினை வராமல் தடுக்க இயலும்.