பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு எளிமையான பாட்டி வைத்தியங்கள்…

By Sowmiya

Published:

பல் போனால் சொல் போச்சு என்பது பழமொழி. நாம் உணவு உண்பதற்கும் பேசுவதற்கும் பல் மிகவும் அவசியம். நல்ல ஆரோக்கியமான பற்களே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். உணவு பழக்கவழக்கத்தாலும் முறையற்ற பற்கள் பராமரிப்பினாலும் பற்களில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பல் வலி, பல் சொத்தை, ஈறுகளில் புண், வீக்கம் போன்ற பல பிரச்சனைகள் பற்களில் ஏற்படுகிறது.

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பார்கள் ஆனால் இப்பொழுது ஆலமர வேப்பமரக் குச்சிகளை நாம் தேடிப் பிடிப்பது என்பது அரிதான விஷயம். எனவே வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இதனை சரி செய்யலாம். இந்த பிரச்சனைகளுக்கு எப்படி எளிமையாக வீட்டிலேயே சரி செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

istockphoto 519407697 612x612 1

1. பல் வலி சரியாக:

  • நல்ல சுத்தமான தேனை பற்களின் ஈறுகளில் தேய்த்து வந்தால் சில நாட்களிலேயே பல்வலி குணமடையும்.
  • அழுகல் ஏதும் இல்லாத சுத்தமான புதினா இலையை அலசி வெயிலில் உலர வைக்க வேண்டும் பின்னர் புதினா இலையை இடித்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும் பொடியாக்கிய புதினா உடன் உப்புத்தூளினை கலந்து காலை இரவு என இரண்டு வேலைகளிலும் பற்களை துலக்கி வந்தால் பல் வலி குணமடையும்.
  • கிராம்பு ஒரு துண்டு எடுத்து இடித்து பல்லில் வலியுள்ள இடத்தில் வைத்தால் பல் வலி குணமடையும்.
  • வெந்நீரில் சிறிதளவு உப்பு போட்டு கரைத்து வாய் பொறுக்கும் சூட்டில் கொப்பளித்தால் பல்வலி குணமாகும்.

istockphoto 1138671262 612x612 1

சொத்தை பல் குணமாக்கும் வழிகள்:

  • எலுமிச்சை சாற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் பல் சொத்தை சரியாகும்.
  • சொத்தையான பல்லின் மேல் வெண்ணையை தடவினால் பற்களில் உள்ள கிருமிகள் இறந்து விடும் எனவே சொத்தை சரியாகிவிடும்.
  • வேப்ப இலையை பொடி செய்து காலை மாலை இரு வேளையிலும் பல் தேய்த்து வந்தால் பல் சொத்தையானது நீங்கிவிடும்.

ஈறுகளில் உள்ள புண்குணமாக:

istockphoto 1364627618 612x612 1

  • படிகாரத்தை நெருப்பில் சுட்டு அதனை தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளித்து வர வேண்டும் தொடர்ந்து இவ்வாறு செய்ய ஈறுகளில் உள்ள புண்கள் குணமாகிவிடும்.
  • நன்னாரி வேரினை சுத்தமான தண்ணீரில் ஊற வைத்து காலை மாலையும் வாய் கொப்பளித்து வந்தால் ஈறுகள் குணமடையும்.
  • படிகாரத்தை பொடி செய்து தேனில் குழைத்து பல் ஈறில் காணப்படுகின்ற புண்ணில் தினமும் மூன்று வேளைகள் தடவி வந்தால் புண் குணமடையும்.

பல் வீக்கத்தை சரி செய்யும் வழிகள்:

  • இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் வாயில் உள்ள கிருமிகள் எல்லாம் இறந்து பல் வீக்கம் குறையும்.
  • தினமும் காலை வேலைகளில் முருங்கை இலை சாற்றை கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் பல் வீக்கம் சரியாகும்.