முதல் நாள் இரவே கருப்பு நிற உலர் திராட்சையினை ஊறவைத்து வெறும் வயிற்றில் காலையில் எழுந்ததும் சாப்பிடவும். அடுத்து 2 முதல் 3 டம்ளர் தண்ணீர் குடிக்கவும். அதன்பின்னர் புரதச் சத்து நிறைந்த பயறு வகைகள், பருப்பு வகைகளுடன் காலை உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன்பின்னர் மதிய உணவுக்கு 2 மணி நேரம் முன்னர் ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா என ஏதாவது ஒரு பழத்தினை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
மதிய நேரத்தினைப் பொறுத்தவரை ஏதாவது ஒரு குழம்புடன் இரும்புச் சத்து நிறைந்த கீரை வகைகளையும் நீர்ச் சத்து நிறைந்த காய்கறிகளையும் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். தயிரினை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுதல் நல்லது.
அதன்பின்னர் மாலை நேரம் சுண்டல், பயறு வகைகளைத் தாளித்து ஸ்நாக்ஸ் போல் சாப்பிட வேண்டும். அதன்பின்னர் இரவு நேர உணவுடன் அதிக அளவு நார்ச் சத்து நிறைந்த உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
மேலும் நட்ஸ் வகைகளையும், ஒருநாளைக்கு ஒரு முட்டையினையும் முடிந்த அளவு எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். இரவு உணவினை முடித்த பின்னர் பாலில் பேரிச்சம் பழத்தினை ஊறவைத்து சாப்பிடுதல் வேண்டும்.